Connect with us
 

News

மாஸ்டர் படத்தின் புதிய வெளியீட்டு தேதி அறிவிப்பு !

Published

on

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் தளபதி விஜய் நடிக்கும் ‘மாஸ்டர்’ படப்பிப்புகள் முடிவடைந்து தற்போது போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் முடிவடைந்து வெளியீட்டுக்காக காத்திருக்கிறது படம்.இந்த படத்தில் விஜய்க்கு வில்லனாக மக்கள் செல்வன் விஜய்சேதுபதி நடிக்க மாளவிகா மோகனன் ஜோடியாக விஜய்க்கு முதல் முறையாக நடித்துள்ளார். ராக்ஸ்டார் அனிரூத் இசையில் பாடல்கள் வெளியாக பட்டையை கிளப்பு வருகிறது.

இந்த மாதம் 9 தேதி படம் வெளியாகும் என்று படத்தின் பூஜை போட பட்ட போதே அறிவித்தது படக்குழு ஆனால் தற்போது கொரோனா காரணாமாக சொன்ன தேதியில் வெளியிட முடியாது என்று படக்குழு அறிவித்து விட்டது.டீஸருக்காக காத்திருந்த விஜய் ரசிகர்களை கொரோனா வந்து சிதற விட்டுவிட்டது அதெ போல மார்ச் 22 வெளியாகயிருந்த டிரைலர் ஏப்ரல் 14 தேதி தள்ளி வைத்தது தயாரிப்பு குழு தமிழ் புத்தாண்டு அன்று படத்தின் டிரைலர் வெளியாகும் என்று கோறியது.

இந்த நிலையில் விஜய் அவர்களின் நெருங்கிய நண்பரும் நடிகருமான சஞ்சீவ் ‘மாஸ்டர்’ படம் வருகிற ஜூன் மாதம் வெளியிட படக்குழு திட்டமிட்டுள்ளதாக கூறியுள்ளார். அன்றைய தினம் விஜய் அவர்களின் பிறந்த நாள் அதனால் அன்றைக்கே படத்தை வெளியிட படக்குழு திட்டமிட்டுள்ளதாக கூறியுள்ளார். இருந்தாலும் இது எந்த அளவிற்க்கு உண்மை என்று தெரியவில்லை அதிகார்வபூர்வ ஆறிவிப்புக்காக காத்திருப்போம்.