News
மாஸ்டர் படம் வெளியீடு பற்றி அமைச்சர் கடம்பூர்ராஜு கருத்து !

கைதி படத்தின் பிரமாண்ட வெற்றிக்கு பின்னர் இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் தளபதி விஜய் – விஜய் சேதுபதி நடித்து வெளிவரவிருக்கும் திரைப்படம் ‘மாஸ்டர்’ இப்படம் பொங்கள் திருநாளில் திரைக்கு வரவுள்ளதாக படக்குழு அறிவித்துள்ளது.
இந்நிலையில் நேற்று சென்னை கலைவாணர் அரங்கத்தில் தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்கத்தின் நிர்வாகிகள் பொறுப்பேற்பு விழா நடைபெற்றது. இதில் கலந்து கொண்ட அமைச்சர் கடம்பூர் ராஜு வெற்றி பெற்ற நிர்வாகிகளுக்கு சான்றிதல் வழங்கினார்.
பின்னர் மேடையில் பேசிய அவர்:-
‘மாஸ்டர்’ திரைப்படம் வெளியாகவுள்ளதால் தமிழகத்தில் திரையரங்குகளில் எண்ணிக்கை அதிகரிக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர். ஆனால் பொங்களுக்கு முன்பாகவே தமிழகத்தில் கொரோனா தொற்று
இல்லாமல் போய்விடும் என நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
மேலும் மக்கள் இந்த தொற்றிலிருந்து பாதுகாக்கவே சமூக விலகலுடன் முகக்கவசம் அணிந்து அரசு விதித்துள்ள கட்டுப்பாடுகளை கடைப்பிடித்தால் இந்த கொரோனா வைரசை விரைவில் விரட்டி விடலாம் என்று தெரிவித்துள்ளார்.