News
மாஸ்டர் லீக் காட்சிகளை வெளியிட்ட டிஜிட்டல் நிறுவனத்திடம் 25 கோடி கேட்டு நோட்டீஸ் !
விஜய் நடித்த ‘மாஸ்டர்’ திரைப்படம் ஜனவரி 13-ஆம் தேதி வெளியாகி மாபெரும் வசூல் சாதனை புரிந்து வருகிரது. ஆனால் படம் வெளியாக இரண்டு நாட்களுக்கு முன்னரே ஒரு சில காட்சிகள் வெளியானது இதனால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
இதனையடுத்து படக்குழுவினர் விசாரணையில் இறங்கிய போது இந்த படத்தில் பணிபுரிந்த டிஜிட்டல் நிறுவனமொன்றில் பணிபுரிந்த ஊழியர் தான் இந்த காட்சிகளை கசிய விட்டார் என்பது தெரியவந்தது.
ஊரில் இருக்கும் விளம்பர கம்பெனிகள் இவர்களுக்கு சொந்தமான ஒரு விளம்பரத்தை உபயோகப்படுத்தினாலே அதற்கு காப்பி ரைட் செய்யும் இந்த நிறுவனமே இந்த வேலையை செய்துள்ளது என்பது ரசிகர்களின் கடும் கோபம்.
இதனை அடுத்து தற்போது தயாரிப்பு தரப்பில் இருந்து சம்பந்தப்பட்ட டிஜிட்டல் நிறுவனத்திற்கு நோட்டீஸ் அனுப்பி உள்ளது. இந்த நோட்டீசில் ‘மாஸ்டர்’ திரைப்படம் ரிலீஸ்க்கு முன்பாகவே காட்சிகள் வெளியான விவகாரத்தில் ரூபாய் 25 கோடி நஷ்ட ஈடு தர வேண்டும் என குறிப்பிடப்பட்டுள்ளது
இந்த விவகாரத்தில் சம்பந்தப்பட்ட நிறுவனம் என்ன பதிலளிக்கப் போகிறது? இந்த விவகாரம் நீதிமன்றத்திற்கு செல்லுமா? அல்லது பேச்சுவார்த்தை நடைபெறுமா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்