Connect with us
 

Tamil News

மாஸ்டர் வெளியீட்டு தேதியில் எந்த ஒரு மாற்றமும் இல்லை படக்குழு அதிரடி அறிவிப்பு !

Published

on

தளபதி விஜய் நடிப்பில் உருவாகியிருக்கும் படம்தான் மாஸ்டர் இதன் போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் கிட்டத்தட்ட நிறைவடையும் நிலையில் உள்ளது கடந்த ஞாயிறு அன்று இப்படத்தின் இசை வெளியீட்டு விழா பிரமாண்டமாக நடைபெற்று முடிந்தது.இன்னும் ஒரு சில தினங்களில் இப்படம் சென்சாருக்கு செல்ல உள்ளது.

இந்த நிலையில் கொரோனா வைரஸ் பரபரப்பு காரணமாக இந்த படத்தின் ரிலீஸ் தேதி தள்ளி வைக்க வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது. அது மட்டுமில்லாமல் மார்ச் மாதம் முழுவதும் தமிழகத்தில் உள்ள அனைத்து திரையரங்குகளும் மூடப்படும் என்று அரசு அதிகார்வபூர்வமாக அறிவித்தது. இதனால் ஏப்ரல் 9 தேதி சொன்னது போல இப்படம் வெளியாகுமா என்ற சந்தேகம் எழுந்துள்ளது விஜய் ரசிகர்களுக்கு.

தற்போது இதை பற்றி படக்குழு தெரிவித்த அறிக்கை என்னவென்றால் இப்போதைக்கு மாஸ்டர் படம் ஏப்ரல் 9 தேதி சொன்ன தேதியில் வெளியாகும் கண்டிப்பாக இப்படத்தின் வெளியீடு முடங்கி கிடக்கும் மக்களை ரசிகர்களை வெளியில் கொண்டுவரும் படமாக இருக்கும்.

ஏப்ரல் 9 தேதிக்குள் கொரோனா வைரஸ் கண்டிப்பாக அடங்கி விடும் என்று நம்புகிறோம் அதனால் இப்போதைக்கு மாஸ்டர் படத்தின் வெளியீட்டு தேதியில் எந்த ஒரு மாற்றமும் இல்லை என்று படக்குழு திட்டவட்டமாக கூறியுள்ளனர்.