News
மீண்டும் படம் தயாரிக்கும் நிதின் சத்யா

சில படங்களில் கதாநாயகனாகவும், பல படங்களில் கேரக்டர் வேடங்களிலும் நடித்திருப்பவர் நிதின் சத்யா. வெங்கட் பிரபுவின் யூனிட் நடிகர்களில் ஒருவரான நிதின் சத்யா, சில மாதங்களுக்கு முன்பு ஜருகண்டி என்ற படத்தை, ஷ்வேத் என்டர்டெய்ன்மென்ட் என்ற நிறுவனத்தின் மூலம் தயாரித்து வெளியிட்டார். ஜெய் நாயகனாக நடித்த அப்படம் வெற்றி பெற்றது.
இந்நிலையில், தற்போது அவர், கிரைம் திரில்லர் படத்தை தயாரிக்கும் முயற்சியில் இறங்கியிருக்கிறார். பிரபு சார்லஸ் என்ற புதியவர் இயக்கும் இந்த படத்தில் வைபவ் நாயகனாக நடிக்கிறார். ஜருகண்டி படத்தைப்போலவே இந்த படத்திலும் ஒரு கேரக்டரில் தானும் நடிக்கிறார் நிதின்சத்யா.