Connect with us
 

News

மீண்டும் மன்னவன் வந்தானடி படப்பிடிப்பு விரைவில் ஆரம்பம் !

Published

on

இயக்குநர் செல்வராகவன் இயக்கத்தில் சந்தானம் நடிக்க ஆரம்ப்பிக்கப்பட்ட படம்தான் ‘மன்னவன் வந்தானடி’ ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்ப்பார்ப்புகளை ஏற்படுத்திய படம். காதல் படமாக தயாரான இந்த திரைப்படம் பாதியிலேயே படப்பிடிப்பு நிறுத்தப்பட்டது ஹைதராபாத் மற்றும் அமெரிக்காவில் படப்பிடிப்புகள் நடந்தது. ஆனால் பணப்பிரச்சனை காரணமாக இந்த படம் பாதியிலேயே கைவிடப்பட்டது.

சுமாராக இந்த படம் கைவிடப்பட்டு நான்கு ஆண்டுகளுக்கு பிறகு இப்போது அந்த படத்தை தூசு தட்டப்பட உள்ளதாக சொல்லப்படுகிறது. சமீபகாலமாக சந்தானத்தின் படங்கள் நல்ல வரவேற்ப்பை பெற்றுவரும் நிலையில் இந்த படத்தை வேறோரு தயாரிப்பாளர் அந்த படத்தில் முதலீடு செய்ய வருண் மணியன் முன் வந்துள்ளார்.

இந்நிலையில் இந்த படத்தை முடித்துக் கொடுக்க தங்கள் மற்ற படங்களை எல்லாம் கிடைப்பில் போட்டுவிட்டு சந்தானமுன் செல்வராகவனும் இந்த படத்தில் கவனம் செலுத்த ஆரம்ப்பித்துள்ளதாக கூறப்படுகிறது.