Connect with us
 

News

ரசிகரின் இறுதி சடங்குக்கு நான் சென்றால் அதுவே தவறான முன்னுதாரணமாகிவிடும் – யாஷ் !

Published

on

கன்னடத்தில் யாஷ் நடித்து வெளியான திரைப்படம் கே.ஜி.எஃப் சாப்டர் 1 தமிழ், ஹிந்தி,தெலுங்கு உள்ளிட்ட மொழிகளில் டப்பிங் செய்து வெளியிடப்பட்டது. இந்த திரைப்படத்தின் மூலன் இந்தியா முழுவதும் பல கோடி ரசிகர்கள் உருவாகினர்.

இந்நிலையில் அவரின் ரசிகர் ராமகிருஷ்ணா என்ற இளைஞர் ஒருவர் குடும்ப சூழ்நிலை காரணமாக தற்கொலை செய்து கொண்டார். தற்கொலை செய்வதற்கு முன்னர் கடிதம் எழுதி வைத்துள்ளார். அதில் அவர் என் இறுதி சடங்குக்கு யாஷ் கலந்து கொள்ள வேண்டும் என்பதே என் இறுதி ஆசை எனக் கூறியிருந்தார்.

அதற்கு பதில் அளித்த நடிகர் யாஷ் அப்படி நான் கலந்து கொண்டால் அதுவே தவறான ஒரு முன்னுதாரணமாக இருக்கும் என்பதால் நான் கலந்துகொள்ளவில்லை. இதை பற்றி டுவிட்டர் பக்கத்தில் அவர் கூறியது நாங்கள் நடிகர்கள் உங்கள் கைத்தட்டலையும் விசிலையும் கேட்கவும் வாழ்கிறோம். உங்கள் அன்பை மட்டுமே எதிர்பார்க்கிறோம் இதுபோன்ற செயலை எதிர்பார்க்கவில்லை என்று பதிவிட்டுள்ளார்.

Continue Reading