News
ரங்கஸ்தலம் தமிழ் ரீமேக்கில் மாஸ்டர் ராகவா லாரன்ஸ்

இந்த ஆண்டு நடிகர் ராம்சரண் – சமந்தா நடிப்பில் தெலுங்கில் வெளியாகி மாபெரும் வெற்றி படம்தான் ரங்கஸ்தலம் இந்த படத்தில் ராம்சன் காது கேளாதவராக அருமையான நடிப்பை வெளிப்படுத்தியிருப்பார்.சுகுமார் இயக்கிய இப்படத்தில் நடிகர் ஆதி ஒரு முக்கியமான கதாப்பாத்திரல் நடித்திருப்பார்.
இந்நிலையில் இப்படத்தின் தமிழ் ரீமேக் உரிமையை நடிகர் லாரன்ஸ் கைப்பற்றியிருப்பதாக தகவல் வெளிவந்துள்ளது. இப்படத்தில் தானே நடிக்க முடிவெடுத்துள்ள ராகவா லாரன்ஸ் லிங்குசாமியை இயக்குனராக ஒப்பந்தம் செய்துள்ளாராம்.
ராகவா லாரன்ஸ் தற்போது இந்தியில் காஞ்சனா 2 படத்தின் ரீமேக் இயக்கத்தில் பிஸியாக உள்ளார். அப்படத்தின் வேலைகள் முடிந்தவுடன் ரங்கஸ்தலம் ரீமேக்கில் நடிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது. எனவே கூடிய விரையில் இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கலாம்.