News
ரஜினியுடன் ஜோடி சேரும் தனுஷ் பட நடிகை

வெற்றி மாறன் இயக்கத்தில் கலைப்புலி எஸ்.தாணு தயாரிப்பில் தனுஷ் நடிப்பில் வெளியான படம் அசுரன் இந்த படம் கடந்த வாரம் வெளியாகி மக்களிடம் நல்ல வரவேற்பை பெற்று வரும் நிலையில் வசூலிலும் சாதனை படைத்தது வருகிறது நேற்று இந்த படம் 100 கோடி வசூல் பட்டியலில் இணைந்தது.
தனுஷ் நடிப்பில் வெளியான படங்களில் 100 கோடி வசூல் செய்த முதல் படம் என்ற பெருமையை இந்த படம் பெற்று விட்டது தனுஷ் படம் மூலம் எந்த ஒரு படமும் லாபம் பார்த்ததில்லை என கூறிய சில தயாரிப்பாளர்களுக்கு சரியான பதிலடி இந்த படத்தின் வசூல்.
இந்த படத்தில் தனுஷ் மனைவியாக நடித்திருப்பவர் மஞ்சுவாரியர் தனது சிறப்பான நடிப்பின் மூலம் அறிமுகமான முதல் தமிழ் படத்திலேயே அணைத்து ரசிகர்களிடம் இருந்து நல்ல பாராட்டுக்களை பெற்று வருகிறார். என்னதான் இவர் மலையாள திரையுலகில் இவர் லேடி சூப்பர்ஸ்டார் என்றாலும் தமிழில் இவருக்கு இது முதல் படம் அதிலேயே இவ்வளவு பெருமை சேர்க்கும் விதமான கதாப்பாத்திரம்.
தற்போது சிறுத்தை சிவா ரஜினியின் 168 படத்தை இயக்க உள்ளார் இந்த படத்தை சன் பிக்கர்ஸ் தயாரிக்க உள்ளது. இந்த படத்திலும் ரஜினிகாந்த் அவர்களுக்கு மஞ்சுவாரியர் ஜோடியாக நடிக்க அதிக வாய்ப்பு உள்ளதாகவும் இது குறித்து அவரிடம் பேச்சு வார்த்தை நடைபெற்று வருவதாக கூறப்படுகிறது.
அது மட்டும் இல்லாமல் நடிகை ஜோதிகா இந்த படத்தில் ஒரு மிக முக்கியமான கதாப்பாத்திரத்தில் நடிக்க உள்ளதாக தகவல் ஒன்று வெளியாகி உள்ளது.ஜோதிகா இதற்கு முன்னர் சந்திரமுகி படத்தில் ரஜினியுடன் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.