News
அடுத்த படத்தில் ரஜினியா அது முற்றிலும் பொய்யான செய்தி – தேசிங்கு பெரியசாமி !

துல்கர் சல்மானின் 25-வது திரைப்படமான கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால் படத்தை இயக்கியவர் தேசிங்கு பெரியசாமி. இப்படம் கடந்த ஆண்டு வெளியாகி மிகப்பெரிய வெற்றி பெற்றது.
இப்படம் வெளியான நேரத்தில் அனைவரின் பாராட்டையும் பெற்றார் தேசிங்கு பெரிசாமி குறிப்பாக ரஜினிகாந்த் இப்படத்தை பார்த்து விட்டு இவருக்கு தொலைபேசி மூலம் வாழ்த்தையும் பாராட்டையும் தெரிவித்தார்.
இந்நிலையில் தேசிங்கு பெரியசாமி ரஜினிக்காக ஒரு கதையை தயார் செய்து வைத்துள்ளதாகவும் அந்த கதையை ரஜனியிடம் சொல்லி அவரிடம் சம்மதம் வாங்கியதாகவும் தகவல் வெளியானது. இதற்கு ஒரு படி மேல் சென்று ரஜனியின் அடுத்த படத்தை இயக்கப்போவது இவர்தான் என்றும் செய்திகள் வலம் வந்தன.
இந்நிலையில் இந்த செய்தி கேட்ட தேசிங்கு பெரியசாமி இதனை திட்டவட்டமாக மறுத்துள்ளார். இது குறித்து தேசிங்கு பெரியசாமி தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளதாவது:- என்னுடைய அடுத்த படம் குறித்த செய்திகள் இணையத்தில் வெளியானது அதை பார்த்து நான் அதிர்ச்சி அடைந்தேன் அதும் முற்றிலும் உண்மையில்லாத தகவல்.
எனது அடுத்த படம் குறித்த அறிவிப்பு விரைவில் நான் அதிகார்வபூர்வமாக அறிவிப்பேன் உங்களின் அன்புக்கும் ஆதரவுக்கும் மிக்க நன்றி. அனைவரும் வீட்டைல் பாதுகாப்பாக இருங்கள் என்று அதில் பதிவிட்டுள்ளார்.