Connect with us
 

News

ரிலீஸ் ஆனது லேடி சூப்பர் ஸ்டார் படத்தின் முதல் பாடல்

Published

on


விஸ்வாசம் படத்தின் மிக பிரம்மாண்ட வெற்றிக்கு பின்னர் நயன்தாராவின் நடிப்பில் அடுத்த மாதம் வெளிவர இருக்கும் படம் ஐரா. தமிழ் திரை உலகில் சுமார் 15 ஆண்டுகளாக முன்னணி நடிகையாக வளம் வந்து கொண்டு இருக்கிறார் நயன்தாரா இவரின் இந்த அளவுக்கு வெற்றிக்கு பின்னால் இவரின் கடின உழைப்பு ஒன்றே உள்ளது.

அதே போல தான் நடிக்கும் படங்களில் தன் நடிப்பிற்கு முக்கியத்துவம் இல்ல படங்களை மட்டும் தேர்வு செய்து நடித்து வருகிறார் கடந்து ஒரு சில ஆண்டுகளாக.

இந்த நிலையில் இவர் முதல் முறையாக இரட்டடை வேடத்தில் நடிக்கும் படம் ஐரா. அதுவும் குறிப்பாக கருப்பு நயன்தாராவாக நடிக்கிறார் என்பது ஒரு அதிர்ச்சி தகவல் இதுவரை இவர் சினிமா பயணத்தில் நடித்திராத கேரக்டர்.

இந்த நிலையில் நேற்று மாலை 5 மணிக்கு கே.எஸ்.சுந்தரமூர்த்தி இசையில் தாமரை அவர்களின் வரிகளில் மேகதூதம் என்ற பாடல் வெளியாகி வெகு வரவேற்பு பெற்று வருகிறது. அதுவும் குறிப்பாக கூற வேண்டும் என்றால் என்னை நீ மறவாதிரு, புயல் காற்றிலும் பிரியாதிரு, போன்ற ஆழமான வரிகளை ரசிகர்கள் மனதில் ஆழமாக பதிந்து உள்ளது.

இதில் நயன்தாரா ஜோடியாக நடிகர் கலையரசன்,யோகிபாபு,ஜெயப்பிரகாஷ் மற்றும் பலர் நடித்திருக்கிறார்கள். எச்சரிக்கை படத்தின் இயக்குநர் இந்த படத்தை இயக்கி உள்ளார். திரைக்கதை பிரியங்கா படத்தின் ஒளிப்பதிவாளராக சுதர்ஷன் ஸ்ரீனிவாசனும் படத்தொகுப்பாளராக கார்த்திக் ஜோகேஷும் உள்ளனர். நயன்தாரா நடித்த அறம் படம் நல்ல வெற்றியை பெற்றது போல் இந்த படமும் வெற்றியை பெரும் என எதிர்பார்க்கப்படுகிறது.