News
ரூ.20 லட்சம் ஃபெப்சிக்கு நிதியுதவி செய்த லேடி சூப்பர் ஸ்டார் !

உலகத்தை மிரட்டும் கொரோனா காரணமாக அனைத்து நாடுகளும் பயத்தில் மூழ்க்கி இருக்கிறது.அதன் காரணமாக முன்னெச்சிருக்கை நடவடிக்காக கடந்த 19-ஆம் தேதி முதல் தமிழ் சினிமா அனைத்து படப்பிடிப்புகளும் தற்போது நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.
இப்படி இருக்கும் நிலையில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ள படப்பிடிப்புகள் மீண்டும் எப்போது தொடங்கும் என்று தெரியாத நிலையில் தினக்கூலி வேலை செய்யும் தொழிலாளர்களின் வாழ்வாதாரம் முற்றிலுமாக பாதிப்படைந்துள்ளது.
இதனால் சுமாராக 15 ஆயிரம் தொழிலாளர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர் என்று ஃபெப்சி தலைவர் மற்றும் இயக்குநர் ஆர்.கே செல்வமணி தெரிவித்தார். இதணை அறிந்த பல நடிகர்கள் உதவி செய்து வந்தனர்.
அந்த வரிசையில் இன்று தமிழ் சினிமாவின் நம்பர் ஒன் நடிகை லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா ஃபெப்சி அமைப்புக்கு ரூ.20 லட்சம் நிதிஉதவி அளித்துள்ளார். பல கோடிகளில் சம்பளம் வாங்கும் நடிகர்கள் கூட மிக குறைந்த நிதியுதவி அளித்த நிலையில் ஒரு நடிகை தானாக முன்வந்து தன்னால் இயன்றதை செய்ய முன்வந்துள்ளார் இதனால் பலரும் நயன்தாராவை பலரும் பாராட்டி வருகின்றனர்.