Connect with us
 

News

வக்கீல் வேடத்தில் சூர்யா இணையத்தை கலக்கும் புகைப்படங்கள் !

Published

on

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர் பட்டியலில் இடம் பிடித்திருப்பவர் சூர்யா. தற்போது இவர் இயக்குனர் கூட்டத்தில் ஒருவன் இயக்குனர் டி.ஜே.ஞானவேல் இயக்கும் ஒரு புதிய படத்தில் கவுர வேடத்தில் நடித்து வருகிறார்.

இப்படத்தில் கர்ணன் பட நடிகை ரஜிஷா விஜயனும் முக்கியமான ஒரு கதாபாத்திரத்தில் நடிக்கிறார். இப்படம் இருளர் பழங்குடியனர் வாழ்க்கை மற்றும் அவர்களின் பிரச்சனையை மையமாக வைத்து உருவாகி வருகிறது இப்படம்.

இப்படத்தின் படப்பிடிப்பு தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதில் சூர்யா பழங்குடியின மக்களுக்கு வாதாடும் வக்கீல் வேடத்தில் நடித்து வருகிறார்.

இந்நிலையில் அதனை உறுதிப்படுத்த வகையில் இப்படத்தின் படப்பிடிப்பு புகைப்படங்கள் சமூக தளங்களில் வெளியாகி வைரலாகி வருகின்றது.

Continue Reading