News
வலிமை படத்தின் டிரைலரை புதிதாத உருவாக்க சொன்ன அஜித் காரணம் என்ன?

அஜித் குமார் இயக்குனர் எச்.வினோத் கூட்டணியில் உருவாகி வரும் திரைப்படம் வலிமை இப்படத்தின் படப்பிடி 95 சதவீதம் முடிவடைந்து விட்டது. இப்படத்தில் அஜித் போலீஸ் வேடத்தில் நடித்துள்ளார்.யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்திருக்கும் இப்படத்தில் அண்ணன், தங்கை, அம்மா, மகன் என பல பாசமான நெஞ்சை நெகிழ வைக்கும் காட்சிகள் இடப்பெற்றுள்ளதாம்.
இப்படத்தின் பர்ட்ஸ் லுக் மற்றும் மோஷன் போஸ்டர் வரும் மே 1-ம் தேதி வெளியாகவிருந்தது பின்னர் கொரோனா இரண்டாம் அலை அதிகரிப்பால் திட்டமிட்டபடி பர்ட்ஸ் லுக் போஸ்டரை வெளியிட முடியாது என்று படக்குழு கடந்த வாரம் அறிவித்திருந்தது.
இப்படத்தில் மிரள வைக்கும் சேசிங் காட்சிகள் பல இடப்பெற்றுள்ளதாம். இதையெல்லாம் படக்குழுவினர் டிரைலரில் இணைந்துள்ளரனர். ஆனால் இந்த காட்சிகளை அனைத்துமே படத்தின் முக்கியமான காட்சிகள் அதனால் இந்த காட்சிகளை டிரைலரின் வெளியிட்டால் படத்தின் மேல் இருக்கும் ஆர்வமும் சஸ்பென்யும் தெரிந்து விடும் அதனால் டிரைலரில் அந்த காட்சிகளை நீக்கி விட்டு வேறு காட்சிகளை சேர்க்க கூறியுள்ளாராம்.
இதனால் படக்குழு தற்போது வேறு ஒரு புதிய டிரைலரை தயார் செய்து வருகிறதாம்.