Connect with us
 

News

வாய்ப்பு கொடுத்த விஜய் அண்ணாவுக்கு மிக்க நன்றி – இயக்குனர் லோகேஷ் கனகராஜ் !

Published

on

இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடிக்கும் படம் ‘மாஸ்டர்’ இந்த படத்தில் விஜய் கல்லூரி பேராசிரியராக நடித்துள்ளார். கல்லூரி மாணவனாக நடிகர் சாந்துனு நடித்துள்ளார். மாளவிகா மோஹனன் விஜய்க்கு ஜோடியாக நடித்துள்ளார். மக்கள் செல்வன் விஜய்சேதுபதி வில்லனாக நடித்துள்ளார் இவர்களுடன் பல முன்னனி நட்ச்சத்திரங்கள் நடித்துள்ளனர்.

கடந்த சில மாதங்களுக்கு முன்னர் இப்படத்தில் மூன்று போஸ்டர்கள் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்ப்பை பெற்றது அதனை தொடர்ந்து விஜய் குரலில் குட்டிக்கதை என்ற பாடல் வெளியாகி இன்று வரையில் 26 மில்லியன் பார்வையாளர்களை கடந்து மிகப்பெரிய சாதனை படைத்து வருகிறது.

கடந்த சில நாட்களாகவே நெய்வேலி உள்ளிட்ட பகுதிகளில் விறு விறுப்பாக நடைபெற்று வந்த இப்படத்தின் படப்பிடிப்பு இன்றுடன் நிறைவடைந்துள்ளதாக ஸ்ரீமன் மற்றும் பிரேம்குமார் ட்விட்டரில் புகைப்படத்துடன் பதிவிட்டுள்ளனர்.

மேலும் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் தனது டுவிட்டர் பக்கத்தில் கூறியதாவது மாஸ்டர் பட பிடிப்பு 129 நாட்களில் முடிவடைந்துள்ளது. இந்தப் பயணம் என் இதயத்திற்கு நெருக்கமாக உள்ளது. என்னை நம்பி இந்த வாய்ப்பளித்த விஜய் அண்ணாவுக்கும் எனது குழுவுக்கும் நன்றி தெரிவித்துள்ளார். இந்த இமய மலைபோன்ற பணி எனக்கும் எனது குழுவுக்கும் எளிமையாக இல்லை என பதிவிட்டுள்ளார்.