Connect with us
 

News

ரஷ்ய அதிபர் மாளிகையில் விக்ரம் நடிக்கும் கோப்ரா படப்பிடிப்பு !

Published

on

விக்ரம், ஶ்ரீநிதி ஷெட்டி, இந்திய கிரிக்கெட் வீரர் இர்பான் பதான் நடிக்கும் திரைப்படம் கோப்ரா. ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்கிறார். படம் பற்றி இயக்குனர் அஜய் ஞானமுத்து கூறும்போது ரஷ்யாவிலுள்ள பீட்டர்ஸ்பர்க்கில் 13 நாட்கள் படப்பிடிப்பு நடைபெற்றது.

அதிபர் புதின் மாளிகையில் சில காட்சிகள் படமாக்கப்பட்டன சினிமா படப்பிடிப்பு நடத்த இந்தியா மாதிரி கடும் கட்டுப்பாடுகள் ரஷ்யாவில் கிடையாது என்பதால் நாங்கள் நினைத்தபடியே காட்சிகளைப் படமாக்கி முடித்தோம்.

கடும் விஷம் கொண்ட கிங் கோப்ரா பாம்பு எதிர்பாராத வகையில் தாக்குதல் நடத்தும். அதுபோல் எதிர்பாராமல் செயல்படும் பல கேரக்டர்களில் விக்ரம் நடித்துள்ளார் என்றார்.