Connect with us
 

News

கடமையை முடித்து பணிக்கு புறப்பட்ட தளபதி விஜய் !

Published

on

தமிழ் சினிமாவில் தற்போது சூப்பர் ஸ்டார் என்றால் கண்டிப்பாக அது தளபதி விஜய்தான். தற்போது நெல்சன் இயக்கும் படத்தில் நடிக்கவிருக்கிறார். இப்படத்தின் பூஜை கடந்த வாரமே நடைபெற்றது. ஆனாலும் படப்பிடிப்பு தொடங்கப்படாமல் இருந்தது காரணம் சட்டசபை தேர்தலுக்கு பின் தொடங்கவிருந்தது.

நேற்று தமிழக சட்டசபை தேர்தல் நடைபெற்றது. இதில் வாக்களிக்க தளபதி விஜய் சைக்கிளில் வந்து இந்தியாவில் உள்ள அனைவரைரின் கவனத்தை ஈர்த்தார்.

இந்நிலையில் தளபதி விஜய் 65 படத்தின் படப்பிடிப்பு ஜார்ஜியா சென்றுள்ளார். ஜார்ஜியா செல்வதற்கு விஜய் விமான நிலையம் வந்தபோது எடுக்கப்பட்ட புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வெளியாகி வைரலாகி வருகின்றது.

தளபதி 65 திரைபப்டத்தின் முதல் கட்ட படப்பிடிப்பு ஜார்ஜியாவில் நடைபெற உள்ளது. அதை முடித்துவிட்டு சென்னை திரும்பும் படக்குழு. இரண்டாம் கட்ட படப்பிடிப்பை மே மாதம் சென்னையில் நடத்த படக்குழு திட்டமிட்டுள்ளது.