Connect with us
 

News

விஜய்சேதுபதி நடிப்பில் உருவான லாபம் ஏப்ரலில் வெளியாகிறது !

Published

on

மக்கள் செல்வன் விஜய்சேதுபதி, ஸ்ருதிஹாசன் நடிக்கும் லாபம் படத்தின் இயக்குனர் எஸ்.பி.ஜனநாதன் கடந்த 14ஆம் தேதி திடீரென்று மரணம் அடைந்தார்.

இதனால் படத்தின் நிலை என்ன என்ற கேள்வி எழுந்துள்ளது. இது குறித்து 7சி என்டர்டெயின்ட்ன்மெண்ட் தரப்பு விடுத்த அறிக்கையில் எஸ்.பி.ஜனநாதனின் படங்கள் தொனிக்கும் கருத்துகள் மற்றும் ஒலிக்கும் போராட்ட குரலுக்கு என்றைக்கும் முடிவு கிடையாது.

லாபம் படம் திரைக்கு வருவதற்கான பணிகளை அவர் முடித்து விட்டார். மீதியுள்ள பணிகளை படக்குழுவினர் செய்து வருகிறோம். எனவே வரும் ஏப்ரல் மாதம் தமிழ் மற்றும் தெலுங்கில் படம் வெளியாகும் என்று கூறியுள்ளது படக்குழு.