News
விஜய்யின் பனையூர் இல்லத்தில் ரகசிய ஆலோசனை கூட்டம் !
தளபதி ‘விஜய் மக்கள் இயக்கம்’ பெயரில் அரசியல் கட்சியை அவரது தந்தை எஸ்.ஏ.சந்திரசேகர் தொடங்கியுள்ளார். இந்த செய்திதான் கடந்த வாரத்தில் பெரும் பேசும் செய்தியாக மக்களுக்கு கிடைத்தது. இந்நிலையில் மக்கள் இயக்க மாவட்ட நிர்வாகிகளுடன் விஜய் சென்னையில் உல்ல பனையூர் இல்லத்தில் ஆலோசனை நடந்திருப்பதாக தெரியவந்துள்ளது.
இந்த ஆலோசனை கூட்டத்தில் விஜய் மக்கள் இயக்கம் மாநில பொறுப்பாளர் புஸ்ஸி ஆனந்த் முக்கிய இடம் வகிப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மேலு இந்த ஆலோசனை நடக்கும் கூட்டத்தில் செல்போன்கள் அனுமதி இல்லை என்றும் இந்த ஆலோசனை மிக ரகசிய ஆலோசனையாக நடபெறும் என்றும் செய்திகள் கிடைத்துள்ளன.
மேலும் அரசியல் கள நிலவரம் எதிர் கால திட்டமில் குறித்து முக்கிய ஆலோசனை நடத்தப்படுகிறது என்றும் தகவல்கள் வெளியாகியுள்ளது.