News
விஜய்யுடன் நடிக்க வாய்ப்பு வந்தால் அந்த வியப்பில் இருந்து மீண்டு வர நிறைய நேரமாகும் !

பிரசன்ன தனது சமூக வலைத்தளத்தில் ரசிகர்கள் கேட்க்கும் கேள்விகளுக்கு பதில் அளித்தார் அப்போது அதில் அவர் கூறியதாவது படத்தில் நானாக இருக்க வில்லன் கதாப்பாதிர வாய்ப்பு ஏற்ப்படுத்தி கொடுக்கிறது. நிச்சயமாக இந்த புதிய ஒரு மாற்றம் எனக்கு மிகுந்த மகிழ்ச்சியை தருகிறது. தற்போது நான் சில படங்களில் மீண்டும் ஹீரோவாக நடித்துக்கொண்டிருக்கிறேன்.
அதிலும் மூழுநீள காமெடி கலந்த சாகசமான ஒரு கதையில் நடிக்க மிகவும் ஆசை எனக்கு அப்படியோரு கதைக்காக காத்திருக்கிறேன் நான். இந்த திரையுலகில் அடிக்கடி நான் ஓரங்கட்டப்படுவது எனக்கும் என் மனதுக்கும் சற்று சோர்வை தந்தாலும் முன்னால் வந்து நிற்க விரும்பும் என்னை ரசிகர்கள் என்றும் ஆதரிப்பார்கள் என்று எனக்கு நன்றாக தெரியும் மிக மிக விரைவில் அந்த இடத்தையும் நான் அடைவேன்.
கார்த்திக் நரேன் இயக்கத்தில் தனுஷ் நடிக்கும் இன்னமும் பெயரிடப்படாத படத்திலும்,விஷால் கூட துப்பறிவாளந்-2 படத்திலும் தற்போது நடித்து வரும் நான் மிக விரைவில் சொந்த படம் ஒன்றை தயாரிப்பேன்.
அஜித் அவர்களை எனக்கும் மிகவும் பிடிக்கும் அவருக்கு ஒரு படத்தில் வில்லனாக நடிக்க ஆசை. தளபதி விஜய் அவர்களுடன் நடிக்க வாய்ப்பு வந்தால் அந்த வியப்பில் இருந்து மீண்டு வரவே எனக்கு நிறைய நேரமாகும். தற்போது தேசிய ஊரடங்கு என்பதால் எனது மகன் விஹான் ,மகள் ஆத்யந்தாவுடன் விலையாடுகிறேன் என்று கூறினார்.