Connect with us
 

News

விஜய் படங்கள் நான் பார்ப்பது இல்லை அவருன் பேசுவதே இல்லை பிரபல நடிகர் பதில் !

Published

on

நடிகர் விஜய்யுடன் நான் பேச மாட்டேன் சினிமாவில் அவர் எந்த அளவுக்கு வளர்ச்சி அடைந்தார் என்பதும் எனக்கு தெரியாது என்று பிரபல சீனியர் நடிகர் நெப்போலியன் கூறியிருப்பது பெரும் பரபரப்பை ஏற்ப்படுத்தியுள்ளது.

தளபதி விஜய் அவர்கள் இன்று தமிழ் சினிமாவில் எந்த அளவுக்கு வளர்ந்து உயர்ந்து இருக்கிறார் என்பது அனைவருமே அறிவார்கள் குறிப்பாக சினிமா துறையில் இருப்பவர்களுக்கு இவரின் வளர்ச்சியை பார்த்து வாயைடைத்து போகும் அளாவிற்க்கு இவரின் வளர்ச்சி இருக்கிறது.

இந்நிலையில் பிரபல நடிகர் நெப்போலியன் தான் விஜய் படங்களை பார்ப்பது இல்லை என்ற்றும் அவருடன் நடித்த போக்கிரி படத்தில் இருவருக்கும் ஏற்ப்பட்ட கருத்து வேறுபாட்டால் நாங்கள் இருவரும் பேசிக்கொள்வதில்லை என்றும் தமிழ் சினிமாவில் அவருடைய வளர்ச்சி குறித்து எனக்கு எதும் தெரியாது என்றும் பேட்டி ஒன்றில் கூறியுள்ளார்.

விஜய் நடிப்பில் பிரபு தேவா இயக்கிய ‘போக்கிரி’ படத்தில் ஒரு மிக முக்கியமான வேடத்தில் நடித்தார் நடிகர் நெப்போலியன் இந்த படத்தின் படப்பிடிப்பின் போது விஜய்யுடன் தனக்கு சில கருத்து வேறுபாடுகள் ஏற்பட்டதாகவும் இந்த படத்தில் பிரபுதேவாவுக்காகவே நான் நடித்தேன் என்றும் நெப்போலியன் இந்த பேட்டியில் குறிப்பிட்டுள்ளார்.