News
மாஸ்டர் படத்தின் ஒரு டிக்கெட் கூட புக் ஆகவில்லை என்று ஷோவையே கேன்சல் செய்த திரையரங்கம் !

சென்னையில் உள்ள முக்கியமான திரையரங்கில் ‘மாஸ்டர்’ திரைப்படதிற்கு மதியம் 12 மணி காட்சிக்கு ஒர் டிக்கெட் கூட புக் ஆகவில்லை என்று அன்றைய காட்சி ரத்து செய்யப்பட்டதாக தகவல் வெளிவந்துள்ளது.
தளபதி விஜய் நடித்த ‘மாஸ்டர்’ திரைப்படம் கடந்த பொங்கள் விருந்தாக வெளியானது இந்த திரைப்படம் உலகம் முழுவதும் சுமார் ரூபாய் 200 கோடி வசூலித்தது என்றும் தகவல்கள் வெளியானது.
இந்நிலையில் சற்று முன்னர் சென்னை அண்ணா சாலையில் உள்ள திரையரங்கு ஒன்றில் ‘மாஸ்டர்’ திரைப்படத்தின் 12 மணி காட்சி ரத்து செய்யப்பட்டது. காரணம் இந்த காட்சிக்கு ஒரு டிக்கெட் கூட ஆன்லைனில் புக் செய்யப்படவில்லை என்பதால் ரத்து செய்யப்பட்டதாக அந்த திரையரங்க ம் அறிவித்தது.
‘மாஸ்டர்’ திரைப்படம் 200 கோடி ரூபாய் வரை வசூல் செய்யது என்ற செய்தி ஒரு புறம் இருக்க இப்படி பட்ட ஒரு தகவல் வந்ததால் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளாது.