Connect with us
 

News

விஜய் வீட்டில் வருமானவரி சோதனை மாஸ்டர் படப்பிடிப்பு பாதியில் நிறுத்தம்

Published

on

விஜய் நடிப்பில் அட்லீ இயக்கத்தில் ஏஜிஎஸ் நிறுவனம் தயாரித்த “பிகில்” திரைப்படம் கடந்த ஆண்டு தீபாவளி அன்று வெளியாகி மாபெரும் வெற்றி பெற்றது. உலகம் முழுவதும் 300 கோடிக்கு மேல் வசூல் செய்தது. இதனால் தயாரிப்பு நிறுவனத்திற்கு மிகப் பெரிய அளவில் லாபம் கிடைத்தது என தகவல் வெளியானது.

இந்த நிலையில் ஏஜிஎஸ் நிறுவனத்தில் ஐடி ரெய்டு நடைபெற்று வருகின்றன . இதனால் கோலிவுட் வட்டாரதில் பரபரப்பு ஏற்பட்டது. இந்த நிலையில் அதன் தொடர்சசியாக விஜய்யிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.

விஜய் தற்போது சேவியர் பிரிட்டோ தயாரிப்பில் , லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாகி வரும் விஜயின் 64 வது படமான “மாஸ்டர்” படத்தில் நடித்து வருகிறார். இந்தப் படத்தில் வில்லனாக மக்கள் செல்வன் விஜய் சேதுபதி நடிக்கிறார். நாயகியாக மாளவிகா நடிக்கிறார். “மாஸ்டர்” வெளிவருவதற்கு முன்பே 200 கோடி ரூபாய் வரை பிசினஸ் செய்தது என தகவல் வெளியானது.

மாஸ்டர் படப்பிடிப்பு சென்னை, டெல்லி, கர்நாடகா போன்ற இடங்களில் நடைபெற்று வருகிறது. தற்போது இதன் படப்பிடிப்பு கடலூர் மாவட்டம் நெய்வேலியில் உள்ள நிலக்கரி சுரங்கத்தில் நடைபெற்று வருகிறது.

மாஸ்டர் படப்பிடிப்பில் இருந்த நடிகர் விஜய்யை வருமானவரித்துறை அதிகாரிகள் விசாரணைக்கு சென்னைக்கு அழைத்து சென்றனர். இதனால் “மாஸ்டர்” படப்பிடிப்பு ரத்தானது.

By : Saranya