News
விவேக் நினைவாக மரக்கன்றுகளை நட்டுள்ள நடிகை ஆத்மிகா !

கடந்த சனிக்கிழமை நடிகர் விவேக் காலமானார் அவரின் நினைவாக பலரும் அவருக்கு நினைவு அஞ்சலி செலுத்தி வருகின்றனர். சிலர் அவரின் கொள்கையை பின்பற்றி வருகிறார்கள் நேற்று அருண் விஜய் அவரின் நினைவாக மரக்கன்று நட்டார் அந்த வகையில் இன்று ஆத்மிகாவும் சில மரக்கன்றுகளை நட்டுள்ளார்.
பின்னர் மரக்கன்று நட்டதை பற்றி கூறிய நடிகை ஆத்மிகா நடிகர் திரு.விவேக் அவர்களின் நினைவாக இன்று எனது வீட்டில் சில மரக்கன்றுகளை நட்டுள்ளேன்.என்னால் இயன்ற இடங்களில் எல்லாம் இந்த பணியைச் செய்ய முடிவு செய்துள்ளேன்.
சுற்றுச்சூழல் பாதுகாப்பு, நீரின் தேவை இதையெல்லாம் முன்கூட்டியே உணர்ந்து அன்றே மக்களுக்கு நன்மை சேர்க்கும் பணியைத் துவங்கியுள்ளார்.அவர் விட்டுச்சென்ற ஒரு கோடி மரங்கள் நடுவது என்ற அவரின் மகத்தானக் கனவை நாம் அனைவரும் சேர்ந்து நிறைவேற்றுவோம்.