Connect with us
 

News

விவேக் நடிப்பில் அடுத்து வெளியாக காத்திருக்கும் மூன்று திரைப்படங்கள் !

Published

on

மறைந்த நடிகர் விவேக் இறுதியாக இவர் நடித்த திரைப்படம் தாராள பிரபு இப்படத்தில் ஹரிஷ் கல்யான் நாயனாக நடித்திருப்பார். அப்படத்தில் விவேக் அவர்கள் கண்ணதாசன் என்ற கதாப்பாத்திரத்தில் நடித்திருப்பார். இந்த கதாப்பாத்திரம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது.

தற்போது நடிகர் விவேக் அவர்கள் நம்ம விட்டு பிரிந்தாலும் இவர் நடித்த மூன்று திரைப்படங்கள் திரைக்கு வர உள்ளன.

விஜய்சேதுபதியுடன் முதல் முறையாக இணைந்துள்ள திரைப்படம் யாதும் ஊரே யாவரும் கேளிர் இப்படத்தை வெங்கட கிருஷ்னா ரோகாந்த் இயக்கியுள்ளார்.

அதே போல லெஜண்ட் சரவணன் அண்ணாச்சி ஹீரோவாக அறிமுகமாகும் படத்திலும் அவருடன் முக்கிய நகைச்சுவை கதாப்பாதிரத்தில் நடித்துள்ளார் விவேக்.

ஷங்கர் இயக்கத்தில் கமல்ஹாசனுடன் முதல் முறையாக இந்தியன் 2 திரைப்படதிலும் நடித்துள்ளார். விவேக் நடிக்க வேண்டிய அனைத்து காட்சிகளும் இப்படத்தில் படமாக்கப்பட்டு விட்டதாம்.