Connect with us
 

News

இந்த முறை நேரடியாக நெட் பிளிக்ஸ் தளத்தில் வெளியாகும் விஷால் நடித்த மதகஜராஜா?

Published

on

விஷால் நடிப்பில் சுந்தர்.சி இயக்கத்தில் உருவான திரைப்பட்ம் மதகஜராஜா இப்படம் கடந்த 2013-ம் ஆண்டு எடுத்து முடிக்கப்பட்ட திரைப்படம். ஏதோ ஒரு பண பிரச்சிணையால் இப்படம் ஏழு அரை வருடங்களாக வெளியாகாமல் முடங்கி கிடக்கிறது. இப்படத்தை வெளியிட விஷால் தரப்பிலும் பல்வேறு முயற்சிகள் எடுக்கப்பட்டது. ஆனாலும் அதுவும் எந்தவிதத்திலும் பலனளிக்கவில்லை.

இந்நிலையில் இப்படம் தற்போது ரிலீக்கு தயாராகி வருவதாக சமூக வலைத்தளக்களில் ஒரு தகவல் பரவி வருகிறது. இப்படத்தை நேரடியாக ஓடிடி தளமான நெட் பிளிக்ஸ் தளத்தில் வெளியிட போவதாக கூறப்படுகிறது. இது குறித்த அதிவார்வபூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்று கூறப்படுகிறது.

இப்படத்தில் விஷாலுக்கு ஜோடியாக அஞ்சலி மற்றும் வரலட்சுமி ஆகியோர் நடித்துள்ளனர். சந்தானம் நகைச்சுவை கதாப்பாத்திரத்திலும் சோனு சூட் வில்லனாகவும் நடித்துள்ளனர். விஜய் ஆண்டனி இப்படத்திற்கு இசையமைத்துள்ளார். இப்படத்தில் நடிகர் விஷால் அவரது சொந்த குரலில் ஒரு பாடலையும் பாடியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.