Connect with us
 

News

ஸ்பைடர் படத்தின் வெளியீட்டு உரிமம் லைகாவுக்கு

Published

on

ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் தெலுங்கு சூப்பர் ஸ்டார் மகேஷ் பாபு,மற்றும் ரகுல் ப்ரீதி இணைந்து நடிக்கும் படம் ஸ்பைடர் பெரும் எதிர் பார்ப்புடன் உருவாகும் இந்த திரைப்படம் விரைவில் வெளியாக உள்ளது.

இந்த நிலையில் ஸ்பைடர்’ படத்தின் ரிலீஸ் உரிமையை லைகா நிறுவனம் பெற்றுள்ளது. இந்த தகவலை லைகா நிறுவனம் அதிகாரபூர்வமாக அறிவித்து.

இந்த நிலையில் இளையதளபதி விஜய் தற்போது ‘மெர்சல்’ படத்தில் நடித்து கொண்டிருக்கும் நிலையில் அவர் நடிக்கும் அடுத்த படத்தை ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கவுள்ளார் என்பது உறுதி செய்யப்பட்ட தகவல் என்பது அனைவரும் அறிந்ததே.

இந்த படத்தை தயாரிப்பது லைகா புரடொக்ஷன்ஸ் நிறுவனமா? அல்லது சன் பிக்சர்ஸ் நிறுவனமா? என்பதில் குழப்பம் இருந்து வருகிறது. இதுகுறித்த அதிகாரபூர்வ தகவல் எதுவும் இதுவரை இல்லை. இந்நிலையில் ஸ்பைடர்் வெளியீட்டு உரிமத்தை லைக்கா பெற்றுள்ளது இப்போதைக்கு ஏ.ஆர்.முருகதாஸின் அடுத்த படம் லைகாவிற்கே என்பது உறுதியாகிவிட்டது.