Connect with us
 

News

ஸ்ரேயாவுக்கு மார்ச் மாதம் 17ஆம் தேதி திருமணம்

Published

on

எனக்கு 20 உனக்கு 18’ படத்தின் மூலம் தமிழில் அறிமுகமானவர் ஸ்ரேயா சரண். ‘மழை’, ‘திருவிளையாடல் ஆரம்பம்’ உள்ளிட்ட பல தமிழ்ப்  படங்களில் நடித்துள்ள இவர், ‘சிவாஜி’ படத்தில் ரஜினிக்கு ஜோடியாக நடித்துள்ளார்.

சில வருடங்களுக்குப் பிறகு சிம்பு ஜோடியாக ‘அன்பானவன்  அடங்காதவன் அசராதவன்’ படத்தில் நடித்தவர், தற்போது ‘நரகாசூரன்’ படத்தில் அரவிந்த் சாமி ஜோடியாக நடித்துள்ளார்.

 இந்நிலையில், மார்ச் 17ஆம் தேதி ஸ்ரேயாவுக்குத் திருமணம் நடக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

ரஷ்யாவைச் சேர்ந்த விளையாட்டு வீரரும், தொழிலதிபருமான ஆண்ட்ரி கெசேவ்வைத் திருமணம் செய்ய இருக்கிறார் ஸ்ரேயா. இவர்களது திருமணம் உதய்ப்பூரில் நடக்க இருக்கிறது. மார்ச் 17, 18, 19 ஆகிய மூன்று நாட்களுக்கு இந்து முறைப்படி இவர்கள் திருமணம் நடக்க இருக்கிறது.

Continue Reading