News
இயக்குனர் ஹரிக்கு கடும் காய்ச்சல் கொரோனா அறிகுறியா?

இயக்குனர் ஹரி தற்போது அருண் விஜய் நடிக்கும் 33-வது படத்தை இயக்கி வருகிறார் இதில் அருண் விஜய்க்கு ஜோடியாக ப்ரியா பவானி சங்கர் நடித்து வருகிறார்.
இந்நிலையில் ஹரி அவர்களுக்கு திடீரென கடும் காய்ச்சல் வந்து தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். ஹரியுடன் பணியாற்றிய ஒரு நபருக்கு கொரோனா தொற்று தொற்று உறுதியான நிலையில் இயக்குனர் ஹரியும் மருத்துவமனையில் அனுமதிப்பட்டுள்ளார்.
ஹரிக்கு கொரோனா பரிசோதனை செய்ததில் நெகட்டிவ் என வந்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளது. இதனால் படப்பிடிப்பு தற்போது ரத்து செய்ப்பட்டுள்ளது மீண்டும் விரைவில் படப்பிடிப்பு தொடங்கும் என்று படக்குழு அறிவித்துள்ளனர்.