News
ஹிந்தி பேசும் ஜெயம் ரவியின் கோமாளி
அறிமுக இயக்குநர் பிரதீப் ரங்கதான் இயக்கத்தில் ஜெயம் ரவி – காஜல் அகர்வால் இணைந்து நடித்து ஆகஸ்ட் 15-ம் தேதி வெளியான படம் கோமாளி இது ரசிகர்கள் மத்தியில் அல்ல பாராட்டையும் வரவேற்பையும் பெற்றது.
சுமார் 16 ஆண்டுகள் கோமாவில் இருந்து மீண்டு எழும் நடிகர் ஜெயம் ரவி தற்கால தொழிநுட்ப வளர்ச்சியில் ஏற்படும் மாற்றங்களை எப்படி அதை ஏற்றுக்கொண்டு அதை சமாளித்தார் என்பதுதான் படத்தின் முழுக்கத்தை. இந்த படம் 90ஸ் கிட்ஸ் ரசிகர்கள் மத்தியில் நல்லவொரு வரவேற்பை பெற்றது.அது மட்டும் அல்லாமல் வசூல் ரீதியாக நல்ல லாபம் கொடுத்தது.
இதன் வெற்றியை கொண்டாடும் விதமாக தயாரிப்பாளர் இயக்குநர் பிரதீப் ரங்கநாதன் அவர்களுக்கு நேற்று ஒரு காரை பரிசாக கொடுத்தார். இந்த படத்தின் ஹிந்தி ரிமேக் உரிமத்தை பிரபல பாலிவுட் தயாரிப்பாளர் நேர்கொண்ட பார்வை படத்தின் தயாரிப்பாளருமான போனி கபூர் கைப்பற்றியுள்ளார்.
இந்தி, தெலுங்கு, கன்னடம் ஆகிய மூன்று மொழிகளில் ரீமேக் செய்யப்படும் இப்படத்தில் போனி கபூரின் மகன் அர்ஜுன் கபூர் ஹீரோவாக நடிக்கவிருக்கிறார். இது பற்றி கூறிய போனி கபூர் ” கோமாளி படத்தின் ரீமேக் உரிமையை கைப்பற்றியது மிகுந்த மகிழ்ச்சியாக உள்ளது. படத்தை எல்லா மொழிகளிலும் ரீமேக் செய்ய திட்டமிட்டுள்ளோம் என கூறியுள்ளார்.