Connect with us
 

News

ஹெலன் படத்தின் தமிழ் ரீமேக்கில் அருண் பாண்டியன் – மகள் கீர்த்தி பாண்டியன் !

Published

on

2019 வருடம் மலையாளத்தில் வெளியாகி சூப்பர் ஹிட்டான திரைப்படம் ஹெலன் திரைப்படம் இத்திரைப்படம் அப்பா – மகள் இரிவரின் பாச பிணைப்பை கொண்ட கதைக்களம்.

இப்படத்தின் தமிழ் ரீமேக் உரிமத்தை நடிகரும் தயாரிப்பாளருமான அருண் பாண்டியன் கைப்பற்றினார். பின்னர் இப்படத்தில் அருண்பாண்டியன் மற்றும் அவரது கடைசி மகள் கீர்த்தி பாண்டியன் இருவரும் இணைந்து நடிக்க உள்ளனர் என்று அதிகார்வபூர்வ செய்தியும் வெளியானது.

இந்த படத்தை தமிழில் இயக்குநர் கோகுல் இயக்கவுள்ளார் இவர் ‘இதற்குதானே ஆசைப்பட்டாய் பால குமாரா, காஷ்மோரா, போன்ற படங்களை இயக்கியவர்.

இந்நிலையில் இன்று இப்படத்தின் டைட்டில் லுக் மற்றும் ஃபர்ட்ஸ் லுக் போஸ்டர் வெளியாகியுள்ளது. இப்படத்திற்கு தமிழில் ‘அன்பிற்கினியாள்’ என்று டைட்டில் வைக்கப்பட்டுள்ளது.

அருண்பாண்டியன் தயாரிப்பில் உருவாகியுள்ள இந்த திரைப்படம் மலையாலத்தில் சூப்பர் ஹிட் ஆனது போலவே தமிழிலும் சூப்பட் ஹிட் ஆகுமா என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.

Continue Reading