News
அண்ணாத்த படத்தால் தயாரிப்பு நிறுவனத்துக்கு 13 கோடி நஷ்டம் ?

ரஜினிகாந்த் நடிப்பில் இயக்குநர் சிறுத்தை சிவா இயக்கத்தில் கடந்த தீபாவளி பண்டியை அன்று மிகப்பெரிய எதிர்பார்ப்புடன் வெளியான திரைப்படம் அண்ணாத்த. ஆனால் படம் வெளியான அடுத்த நிமிடமே படம் மிக மோஷமான விமர்சனங்களை சந்தித்தது.
முதல் நாளிலிருந்து அடுத்தடுத்த நாட்களில் ரசிகர்களின் வருகை குறைய ஆரம்பித்தது. அப்படி கொஞ்சம் கொஞ்சம் வந்த ரஜினி ரசிகர்களையும் மழை வெள்ளம் வரவிடாமல் செய்துவிட்டது. ஆனாலும் படத்தின் தயாரிப்பு நிறுவனம் அண்ணாத்த திரைப்படம் 200 கோடி ரூபாய் வசூல் சாதனை என்று வெளியில் விளம்பரம் செய்துகொண்டது.
இந்தநிலையில் தற்போது கிடைத்த தகவலின்படி அண்ணாத்த திரைப்படம் திரையரங்குகள் மூலமாக 72 கோடி ரூபாயும் ஒட்டுமொத்தமாகவே சுமார் 169 கோடியும் வசூல் செய்திருப்பதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. ஆனால் படத்தின் பட்ஜெட் 182 கோடிக்கு மேல் என்றும் சொல்லப்படுகிறது. அதன் படி அண்ணாத்த திரைப்படம் 10 முதல் 15 கோடிவரைக்கும் நஷ்டம் ஏற்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.