News
வலிமை படத்தில் ஓப்பனிங் பாடல் முதல் 14 நிமிட காட்சிகள் நீக்கம் !

அஜித் குமார் நடிப்பில் இயக்குநர் எச்.வினோத் இயக்கத்தில் போனி கபூர் தயாரிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் ‘வலிமை’2 ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய எதிர்ப்பார்ப்பை ஏற்படுத்திய திரைப்படம். அதுமட்டுமில்லாமல் 3 வருடங்களுக்கு பின்னர் வெளியாகும் அஜித் திரைப்படம்.
இந்தநிலையில் கடந்த 24-ம் தேதி திரையரங்குகளில் தமிழகத்தில் மட்டும் 1000 திரையரங்குகளில் வெளியானது. வெளியான நாள் முதல் இப்படத்திற்கு கலவையான விமர்சனம் மட்டுமே கிடைத்தது அதிலும் குறிப்பாக படத்தின் இரண்டாம் பாகம் முழுவதும் நாடகம் பார்ப்பது போன்று உள்ளது என்று பலர் தெரிவித்து வந்தனர்.
மொத்தமாக இப்படம் 2 மணி நேரம் 55 நிமிடங்கள் ஓடுகிறது. இந்த நிலையில் இப்படத்திலிருந்து சுமாராக 12.50 நிமிடக்காட்சிகளை படக்குழு நீக்கியுள்ளது. அதில் நாங்க வேற மாறி பாடல் காட்சியும் நீக்கப்பட்டுள்ளது.
அந்த பாடலுடன் குடும்ப சென்டிமென்ட் காட்சிகளும் நீக்கப்பட்டுள்ளது. இந்த காட்சிகள் நீக்கி இன்று முதல் திரையரங்குகளில் திரையிடப்படும் என படக்குழு அறிவித்துள்ளது.