News
15 நிமிட சிறப்பு காட்சியில் விஜய்சேதுபதி நடிக்கும் படம்

என்னதான் தான் ஒரு பெரிய நடிகராக இருந்தாலும் தெரிந்த நடிகர்கள் & இயக்குனர்கள் யார் கேட்டாலும் படத்தின் ஒரு சிறப்பு தோற்றத்தில் நடித்து கொடுக்கும் ஒரு நடிகர்.அந்த வரிசையில் நடிகர் அசோக் செல்வன் மற்றும் இறுதிச் சுற்று பட புகழ் ரிடிகா நடிக்கும் ‘ஓ மை கடவுளே’படத்திலும் ஒரு சிறப்பு காட்சியில் வருகிறார்.
அசோக் செல்வன்,ரித்திகாசிங் , வாணிபோஜன் நடித்து வரும் இந்த படத்தை இயக்குனர் மாரிமுத்து இயக்குகிறார்.ரொமான்ஸ் ,காமெடி கலந்த கலந்த இப்படத்தின் படப்பிடிப்பின் பணிகள் விறு விறுவிறுவென நடந்து வரும் இப்படத்தில் மக்கள் செல்வனும் இணைவது கூடுதல் பலம்.
இந்த படத்தில் வெறும் 15 நிமிடமே வந்தாலும் விஜய்சேதுபதிக்கு இந்த படத்தில் இந்த கதாப்பாத்திரம் மிக மிக முக்கியமான மற்றும் திருப்புமுனை ஏற்படுத்தக்கூடிய கதாப்பாத்திரம். இந்த வேடத்தில் நடிக்க இவர் எந்த ஒரு சம்பளமும் வாங்கவில்லை.
விஜய்சேதுபதி மற்றும் அசோக்செல்வன் ஆகிய இருவரும் ‘சூது கவ்வும்’ மற்றும் ‘ஆரஞ்சு மிட்டாய்’ ஆகிய படங்களில் நடித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. இபபடத்தின் அதிகாரவப்பூர்வ டீசர் இன்று மாலை 5 மணிக்கு வெளியாகிறது.