News

17 வருடங்களுக்கு பின்னர் மாஸ்டர் படத்தின் மூலம் இணைந்த யுவன்ஷங்கர் ராஜா – தளபதி விஜய்

Published

on

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் தளபதி விஜய் நடிக்கும் ‘மாஸ்டர்’ படத்தின் ஆடியோ வெளியீட்டு விழா இன்று மாளை 6.30 மணிக்கு நடைபெறவிருக்கும் நிலையில் இன்று காலையில் யாரும் எதிர் பார்க்காத விதத்தில் ஒரு அப்டேட் வெளியிட்டது படக்குழு.

ஏற்கனவே குட்டி ஸ்டோரி, வாத்தி இஸ் கம்மிங் பாடல்கள் வெளியாகி சக்கைப்போடு போட்டு வரும் நிலையில் நேற்று மூன்றாவதாக ‘வாத்தி ரெய்டு” என்ற பாடல் வெளியாகி ஹிட் அடித்து வருகிறது.

தொடர்ந்து மாஸ் குத்துப்பாட்டாக வெளியாகி வரும் நிலையில் ரொமாண்டிக் பாடல் பற்றிய அப்டேட் வெளியாகியுள்ளது. புதிய கீதை படத்தில் முதன்முதலாக யுவன் சங்கர் ராஜா நடிகர் விஜய்க்கு இசையமைத்தார். அதற்கு பிறகு அவர்கள் கூட்டணியில் ஒரு படமும் வரவில்லை.

இந்நிலையில் மாஸ்டர் படத்தில் அனிருத் இசையமைத்துள்ள காதல் பாடலான ”அந்த கண்ண பாத்தாக்கா” என்ற பாடலை யுவன் சங்கர் ராஜா பாடியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. யுவனின் மயக்கும் குரலில் விஜய்யின் பாடலை கேட்க ரசிகர்கள் ஆரவமாக இருக்கின்றனர்.

Trending

Exit mobile version