News
18 மணி நேரம் இடைவிடாது ரிஸ்க் எடுத்து நடித்த சீயான் விக்ரம் !

கடாரம் கொண்டான் படத்தின் வெற்றிக்கு பின்னர் விக்ரம் இயக்குநர் அஜய் ஞானமுத்து இயக்கத்தில் நடித்து வரும் படம் ‘கோப்ரா’ இந்த படத்தில் இடம்பெறும் ஒரு சண்டைக்காட்சியை தொடர்ந்து 18 மணி நேரம் படமாக்கியுள்ளனர் அந்த படக்குழு.
இது குறித்து அப்படத்தின் ஸ்டன்ட் இயக்குநர் திலீப் சுப்பராஜன் கூறுகையில் இந்த படத்தில் மிக நீளமான ஒரு சண்டைக்காட்சி ஒன்று உள்ளது. இந்த சண்டைக்காட்சியில் டூப்பே இல்லாமல் விக்ரம் அவர்களே மிகவும் ரிஸ்க் எடுத்து ஒரிஜினலாக இந்த காட்சியை நாங்கள் படமாக்கினோம்.எனக்கு தெரிந்து மிக கடின உழைப்பாளி என்றால் அது கண்டிப்பாக விக்ரம்தான் என்றார்.
இது பற்றி இயக்குநர் அஜய் ஞானமுத்து கூறுகையில் விக்ரம் எவ்வளவு கஷ்டப்பட்டு நடித்தாலும் கொஞ்சம் கூட ஓய்வு எடுத்துக்கொள்ள மாட்டார். காரணம் உடனடியாக வேறு ஒரு காட்சியை படமாக்க வேண்டிய கட்டாயம் இருக்கும். மேலும் அவருடன் சேர்ந்து நடிக்கும் பல நடிகர்களின் காட்சிகள் படமாக்கி முடிக்கப்பட்ட அன்றிரவு ஊருக்கு செல்ல வேண்டும். எனவே நான் விக்ரமிடம் தொடர்ந்து நடிக்க முடியுமா என்று கேட்டேன் அதற்க்கு அவர் நிலமையை புரிந்து கொண்டு தீவிரத்தையும் புரிந்து கொண்டு தொடர்ச்சியாக 18 நேரம் நடித்து முடித்து கொடுத்தார்.