News

20 ஆண்டுகளுக்கு பின்னர் மீண்டும் இணைவார்களா விஜய் – எஸ்.ஜே.சூர்யா !

Published

on

தளபதி விஜய் நடிக்கும் 65-வது படத்தை இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கவிருந்தார் ஆனால் சன் பிக்சர்ஸ் உடன் சிறு மன கசப்பு காரணமாக அதிலிருந்து விலகினார். அதன் பின்னர் தற்போது கோலமாவு கோகிலா மற்றும் டாக்டர் படங்களை இயக்கிய நெல்சன் அந்த படத்தை இயக்க போவதாக தகவல்கள் வெளியானது.

இந்நிலையில் தற்போது தனது 66-வது படத்தை இயக்குவதற்க்காக விஜய் அவர்களே நடிகர் மற்றும் இயக்குநர் எஸ்.ஜே.சூர்யாவிடம் எனக்கு ஏற்ற போல கதை இருந்தால் கூறுங்கள் எனக் கேட்டுள்ளார் என்று செய்திகள் வெளியாகியுள்ளது.

இதற்க்கு முன்னர் இவர்கள் இணைந்து உருவாக்கிய ‘குஷி’ திரைப்படம் 2001-ஆம் ஆண்டு வெளியாகி ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய வெற்றி பெற்றது.

அதன் பின்னர் எஸ்.ஜே.சூர்யா தற்போது இயக்கும் நினைப்பை விட்டுவிட்டு நடிப்பில் முழுக்கவனத்தையும் செலுத்தி வருவதால் அதற்கான வாய்ப்பு இல்லை என்று சொல்லப்படுகிறது ஒரு தரப்பு ஆனாலும் விஜய்க்காக கண்டிப்பாக ஒரு கதை தயார் செய்து நிச்சயம் இணைந்து மீண்டும் ஒரு திரைப்படம் ரசிகர்களுக்கு கொடுப்பார்கள் என்கிறது ஒரு தரப்பு காத்திருப்போம் நற்செய்திக்காக.

Trending

Exit mobile version