News
2021 எனக்கு கொண்டாட்டமான மனநிலையுடன் நிறைவு பெற்றது – சிம்பு !

2021-ம் ஆண்டு சிம்புவிற்கு மிகப்பெரிய வெற்றி படமாகவும் இவரின் சினிமா வாழ்க்கையில் திருப்புமுனையாகவும் அமைந்தது. காரணம் வெங்கட் பிரபு இயக்கத்தில் இவர் நடிப்பில் வெளியான மாநாடு திரைப்படம் மிகப்பெரிய வெற்றியை கொடுத்ததும் நல்ல வசூல் வேட்டையும் செய்தது. இதணையடுத்து புத்தாண்ட்டை முனிட்டு சிம்பு சிலம்பரசன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியதாவது:-
நம்மில் பலர் நெருங்கிய சொந்தங்களை இழந்திருப்போம் பலர் வாழ்க்கையின் எல்லையை தொட்டு மீண்டிருப்பர். இழப்பையும் நன்மையையும் கடந்த வருடம் கடந்து வந்திருக்கிறோம்.
இறைவனின் பெருங்கருனையால் இந்த புதிய வருடத்தை காணவிருக்கிறோம். தனிப்பட்ட முறையில் மாநாடு படத்தை மிகப்பெரிய வெற்றியாக பரிசளித்த ஆண்டு இவ்வாண்டு.
மிகப்பெரிய கொண்டாட்ட மனநிலையுடன் 2021 ஆண்டை முடிக்கிறேன். 2022 ஆண்டு இதே மகிழ்வுடன் எனக்கும் உங்களுக்கும் அமைய வேண்டிக்கொள்கிறேன்.
என்னை எப்போதும் உங்களில் ஒருவனாக பார்த்துக்கொள்ளும் என் உயிரினும் மேலான ரசிகர்களுக்கும். திரையுலக சொந்தங்களுக்கும் என்றென்றும் எனக்கு ஆதரவாக விளங்கும் பத்திரிகை மற்றும் ஊடக பெருமக்களுக்கும் மற்றும் நண்பர்கள் அனைவருக்கு இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள். நலமே வாழ்க நீங்க இல்லாம நான் இல்லை என கூறியுள்ளார்.