Reviews

3:33 – Movie Review !

Published

on

மிழ் சினிமாவில் பல ஹாரர் த்ரில்லர் திரைப்படங்கள் வந்தாலும் அதில் சிலது மட்டுமே வெற்றி பெறுகிறது மக்களிடையே. இந்த படமும் ஒரு ஹாரர் த்ரில்லர் படம்தான் ஆனால் அதை கொஞ்சம் வித்தியாசமாக சொல்ல முயற்சி செய்திருக்கிறார் இயக்குநர் நம்பிக்கை சந்துரு.

Movie Details

படத்தில் நாயகனாக நடன இயக்குநர் சாண்டி அக்கா, அக்காவின் மகள், அம்மா என ஒரு சிறு வீட்டில் வசித்து வருகிறார். வாழ்க்கையில் ஒரு லோன் வாங்கி எப்படியாவது ஒரு தொழில் செய்ய வேண்டும் என்ற நினைப்பில் இருக்கிறார் சாண்டி. சாண்டி பிறந்த நேரமோ 3:33 அதே நேரமே இவருக்கு ஒரு கெட்டத்தை கொடுக்க போகிறது என்று தெரியாமல் இருக்கிறார்.

இரவில் உறங்கச்சென்றால் கெட்ட கெட்ட கனவாக வருகிறது என்று கூற உன்னை சுற்றி நெகட்டிவ் சக்திகள் அதிகமாக இருக்கிறது என்று கூறுகிறார் ஒரு பாதிரியார். ஆனால் மருத்துவரோ இது ஒரு உளவியல் பிரச்சனை என்கிறார். இதனால் மனதால் மிகவும் வேதனையாகி தடுமாற்றத்தில் இருக்கிறார் இறுதியாக இதிலிருந்து எப்படி மீண்டு வந்தார் இவருக்கு அந்த கனவு வர காரணம் என்ன என்பதே படத்தின் மீதிக்கதை.

த்ரில்லர் படத்தை ஒரு வீட்டுக்குள்ளையே படத்தின் ஒட்டுமொத்த காட்சிகளையும் எடுத்திருப்பது இயக்குநரை பாராட்டியே ஆகவேண்டும். அதற்குள் எப்படி எப்படி விதவிதமாக காட்சிகளை எடுக்க முடியுமோ அப்படி எடுத்துள்ளார் ஒளிப்பதிவாளர்.

சாண்டி என்றாலே ஒரு கலகலப்பான மனிதன் என்று பார்த்து பழகிய நமக்கு இந்த படத்தில் அதை மிஸ் பண்ணுவோம் படம் முழுவதுமே சீரியஸ் முகத்துடன் வலம் வருகிறார்.

சாண்டியின் அம்மாவாக வரும் ரமா, அக்கா ரேஷ்மா ஆகியோர் படம் முழுவதுமே திரையில் வருகிறார். அமைதியாக இருக்கும் இவர்கள் திடீரென பேயாக மாறி நம்மை மிரள வைக்கிறார்கள்.

தான் ஏற்றுக்கொண்ட வேடத்தைற்கு எந்த அளவு அழுத்தம் கொடுத்து சிறப்பாக நடிக்க முடிய்மோ அந்த அளவு சிறப்பான நடிப்பை கொடுத்துள்ளார் சாண்டி.
Cinetimee

சாண்டியின் காதலியாக வரும் நடிகை ஸ்ருதி செல்வம் சாண்டிக்கு பக்க பலமாக இருக்கிறார் படத்திற்கும்.

படத்தில் இயக்குநர் கெளதம் மேனன் இருக்கிறார். படம் முழுவதுமே வருவார். இவர்தான் படத்தின் முக்கிய கதாப்பாத்திரம் என்று நினைத்து படம் பார்க்க போன நமக்கு மிகப்பெரிய ஏமாற்றம் இரண்டு காட்சிகளில் மட்டுமே சிறப்பு தோற்றத்தில் வந்து போகிறார். படத்தின் விளம்பரத்துக்காக இவரின் பெயரை பயன்படுத்தியிருந்தார்களே தவிர படத்தில் இவருக்கு முக்கியத்துவம் எதுவுமே இல்லை. அதே போல சரவணன் மற்றும் மைம் கோபி வந்து போகிறார்கள் திரையில்.

இசையமைப்பாளர் ஹர்ஷவர்தன் ஹாரர் த்ரில்லர் படத்திற்கு தன்னால் முடிந்த வரை எந்த அளவு பயம் ரசிகர்களுக்கு கொடுக்க காட்ட முடியுமோ காட்டியுள்ளார். அதே போல சதீஷ் மனோகரன் ஒளிப்பதிவு அசத்தல்.

ஹாரர் படம் என்பதை தாண்டி த்ரில்லர் படம் என்றால் திரைக்கதை விறுவிறுப்பாக போக வேண்டும். படத்தில் வரும் காட்சிகள் ஆமை வேகத்தில் போவது பொறுமையை சோதிக்கிறது.


மொத்தத்தில் 3:33 நேரம் நல்லா இருக்கு

Trending

Exit mobile version