News

400 கும் அதிகமான திரையரங்குகளில் ஒரு நல்ல நாள் பாத்து சொல்றேன்

Published

on

விஜய் சேதுபதியின் ‘ஒரு நல்ல நாள் பாத்து சொல்றேன்’ திரைப்படத்தை 400 கும் அதிகமான திரையரங்குகளில் வெளியிடுகிறார்    வி சத்யமூர்த்தி

தரமான திரைப்படங்களை மட்டுமே ரசிகர்களுக்கு வழங்க வேண்டும் என்பதில் மிகவும் கவனமாக செயல்பட்டு வருகிறது ‘கிளாப்போர்ட் தயாரிப்பு நிறுவனம்’.

இந்த நிறுவனத்தின் நிறுவனரான வி சத்யமூர்த்தி, தற்போது விஜய்சேதுபதி – கெளதம் கார்த்திக் நடிப்பில் உருவாகியுள்ள  ‘ஒரு நல்ல நாள் பாத்து சொல்றேன்’ படத்தை தமிழகமெங்கும் 400 கும் அதிகமான திரையரங்குகளில், வருகின்ற பிப்ரவரி 2 ஆம் தேதி வெளியிடுகிறார்.

இது வரை நான்   ‘ஒரு நல்ல நாள் பாத்து சொல்றேன்’  படத்தை பார்க்கவில்லை. ஏனென்றால் எனக்கு விஜய் சேதுபதி சார் மீது முழு நம்பிக்கை இருக்கிறது.

அதுமட்டுமின்றி, விஜய்சேதுபதி – கெளதம் கார்த்திக் ஆகியோரின் இந்த புதிய கூட்டணி நிச்சயமாக எல்லா தரப்பு ரசிகர்களாலும் வரவேற்கப்படும் என்று முழுமையாக நம்புகிறேன்.

‘ஒரு நல்ல நாள் பாத்து சொல்றேன்’  படத்தின் மூலம் தமிழ் திரையுலகில் தனக்கென்று ஒரு அடையாளத்தை பதிக்க இருக்கிறார் இயக்குநர் ஆறுமுக குமார். இந்த படத்தின் தமிழக விநியோக உரிமையை ‘மினிமம் காரண்ட்டி’ முறையில் வாங்கி இருப்பது பெருமையாக இருக்கின்றது. வருகின்ற பிப்ரவரி 2 ஆம் தேதி அனைவருக்கும் நல்ல நாளாக இருக்கும்…” என்று நம்பிக்கையுடன் கூறுகிறார் தயாரிப்பாளர் – விநியோகஸ்தர் வி சத்யமூர்த்தி.

Trending

Exit mobile version