News
49 ஆண்டுகளுக்கு பின்னர் ரீமேக் ஆகும் காசேதான் கடவுளடா !
தமிழில் ஏற்கனவே வெற்றி பெற்ற ரஜினிகாந்த் நடித்த பில்லா, தில்லு முல்லு, மாப்பிள்ளை, ஜெமினிகணேசனின் நான் அவனில்லை உள்ளிட்ட படங்கள் தமிழில் ரீமேக் ஆகியுள்ளது இதை தவிர ஏராளமான படங்களும் ரீமேக் ஆகியுள்ளது. தற்போது காசேதான் கடவுளடா படமும் ரீமேக் ஆகவுள்ளது.
இந்த படம் 1972-ம் ஆண்டு திரைக்கு வந்தது நடிகர் கார்த்திக் அப்பா முத்து ராமன் , தேங்காய் சீனிவாசன், வெற்றிற ஆடை மூர்த்தி, லட்சுமி, மனோரமா நடித்திருந்தனர். சித்ராலயா கோபு இப்படத்தை இயக்கியிருந்தார். படம் இடம்பெற்ற ஜம்புலிங்கமே ஜடாதரா, மெல்ல பேசுங்கள், அவள் என்னை நினைத்தாள், இன்று வந்த இந்த மயக்கம், ஆண்டவன் தொடன்கி போன்ற பாடல்கள் அந்த காலத்தில் பட்டி தொட்டியெங்கும் ஒலித்தன.
இந்நிலையில் இப்படத்தின் ரீமேக்கை இயக்குநர் ஆர்.கண்ணன் இயக்கவிருக்கிறார். இதில் முத்துராமன் கதாப்பாத்திரத்தில் நடிகர் சிவா, தேங்காய் சீனிவாசன் கதாப்பாத்திரத்தில் யோகி பாபு ஆச்சி மனோரமாவாக ஊர்வசி நடிக்கவிருக்கிறார்கள்.
படம் குறித்து ஆர். கண்ணன் கூறும் போது கொரோனா தொற்றால் மக்கள் மன அழுத்தத்தில் இருக்கும் இந்த காலத்தில் ஓ.டி.டி தளங்களில் அதிகமான மர்மம், திகில், கிரைம் படங்களே அதிகம் வெளியாகிறது. மக்களை சிரிக்க வைக்கும் படைப்பாக காசேதான் கடவுளடா படத்தை நவீன காலத்துக்கு ஏற்ப ரீமேக் செய்கிறோம். காசேதான் கடவுளடா படம் எக்காலத்துக்கும் பொருந்தும் கதையமைப்பை கொண்ட படம் என்று கூறினார்.