News

7 மொழி படங்களை பின்னுக்கு தள்ளி மெர்சல் படம் பிரிட்டன் விருது பெற்றது

Published

on

தளபதி விஜய் நடிப்பில் மெர்சல் திரைப்படம் கடந்த ஆண்டு தீபாவளி அன்று வெளியாகி மிகப்பெரிய வெற்றியை பெற்றது. இந்த படத்தின் டீசர், டிரைலர் உலக அளவில் சாதனை செய்தது. அதேபோல் வசூலிலும் ரூ.200 கோடியை தாண்டியது.

 ஆனால் தற்போது பிரிட்டன் தேசிய திரைப்பட விழாவில் மெர்சல் சிறந்த வெளிநாட்டு படம் என்ற விருதுக்காக தேர்வு செய்யப்பட்டுள்ளது.

லண்டனில்  நடைபெற்ற பிரிட்டனின் 4வது தேசிய திரைப்பட விழாவில், மெர்சல் திரைப்படத்துக்கு இந்த விருதை விழாக்குழுவினர் அறிவித்தனர். இந்த விருது படக்குழுவினரை மகிழ்ச்சியடைய செய்துள்ளது.

ஏற்கனவே லண்டனில் இந்த படம் இதுவரை இல்லாத அளவில் மிகப்பெரிய வசூலை பெற்ற தமிழ்ப்படம் என்ற பெருமையை பெற்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Trending

Exit mobile version