News

ரஜினியின் ஜெயிலர் படத்தில் 7 சண்டை காட்சிகள் !

Published

on

ரஜினிகாந்த் தற்போது நெல்சன் இயக்கத்தில் ஜெயிலர் என்ற படத்தில் நடித்து வருகிறார். ரஜினியோடு இப்படத்தில் தமன்னா, ரம்யா கிருஷ்ணனன், யோகி பாபு, வசந்த் ரவி ஆகியோர் நடித்து வருகிறார்கள்.

ஜெயிலர் படத்தின் படப்பிடிப்பு கடலூருக்கு அருகில் நடந்து வரும் நிலையில் அதன் படப்பிடிப்பு புகைப்படங்கள் இணையத்தில் வெளியானது.

இந்தநிலையில் ஜெயிலர் படத்தின் படப்பிடிப்பு 50- சதவீரம் படப்பிடிப்பு முடிவடைந்து விட்ட நிலையில் இப்படம் அடுத்த ஆண்டு ஏப்ரல் மாதம் வெளியாகும் என கூறப்படுகிறது.

இப்படத்தின் சண்டைப்பயிற்சி மாஸ்டர் சிவா கூறியதாவது. இப்படத்தில் மொத்தமாக 7 சண்டைக்காட்சிகள் முடிவடைந்துள்ளது. இவை அனைத்தும் சிறப்பாக வந்துள்ளது. இந்த சண்டைக்காட்சிகள் அனைத்தும் ரசிகர்களுக்கு பிடித்தமான ஆக்‌ஷன் காட்சிகளாக இருக்கும் என்று தெரிவித்துள்ளார்.

Trending

Exit mobile version