படத்தின் நாயகனான ரஷித் ஷெட்டி சிறு வயதிலேயே ஒரு கார் விபத்தில் தன் அப்பா, அம்மா, தங்கை ஆகியோரை இழந்து உறவு, நண்பர்கள் என இல்லாமல் தனியாக வாழவேண்டுமே என்ற ஒரு சூழ் நிலையில் வாழ்ந்துவருகிறார்.அதே போல ஒரு நாய் பண்ணையிலிருந்து தப்பித்து இவரின் வீட்டில் வந்து சேர்கிறது. ஆரம்பத்தில் அந்த நாயை பார்த்ததும் வெறுக்கும் ரஷித் போக போக அந்த நாய்மட்டும்தான் என் உலகம் என்று நினைத்து வாழவும் ஆரம்பிக்கிறா. குறிப்பாக இவரின் வாழ்வில் எந்த ஒரு குறிக்கோளும் இல்லாமல் இருந்த இவருக்கு ஒரு வாழ்க்கை காட்டுகிறது இந்த நாய்.
ஒரு நாள் உடல் நிலை சரியில்லாமல் போக அதை கால்நடை மருத்துவரிடம் கொண்டு காட்டுகிறார். அதை பரிசோதித்து பார்த்த மருத்துவர் நாய்க்கு கேன்சர் பாதிப்பு வருகிறது அதை குணப்படுத்த முடியாது என்றும் கூறி இன்னும் சில நாட்கள் மட்டும்தான் உயிருடன் இருக்கும் என்று கூறுகிறார். அது இறப்பதற்கும் அதன் ஆசை என்னவென்று அறிந்து அதை நிறைவேற்ற முயல்கிறார் ரஷித் ஷெட்டி இறுதியில் அதில் வெற்றி பெற்றாரா அதன் உயிரை காப்பாற்றினாரா இல்லையா என்பதுதான் படத்தின் மீதிக்கதை.
படத்தின் கதைக்கு நாயகனாக நடித்திருக்கும் ரஷித் ஷெட்டி 2019-ம் ஆண்டு தமிழில் வெளிவந்த திரைப்படம் அவனே ஶ்ரீ நாராயணனா இப்படம் இவருக்கு சுமாரான வரவேற்பை கொடுத்தது.
ஆனால் இப்படத்தில் ஒரு உணர்வுபூர்வமான கதாப்பாத்திரத்தில் நடித்திருக்கிறார். ஒரு ஒரு காட்சியிலும் நம்மை உருகி அழ வைக்கிறார் குறிப்பாக இவருக்கு நாய் மேல் பாசம் வந்த பின்னர்.
வாழ்க்கையில் ஒரு குறிக்கோளும் இல்லாமல் ஏனோ தானோ என்று வாழும் இவரின் வாழ்க்கையில் செல்லப்பிராணியான நாய் ஒரு பிடிப்பாக வந்த பின்னர் இவரின் வாழ்க்கையில் ஏற்படும் மாற்றங்களை உணர்ந்து உருகி நடித்துள்ளார்.
நாய்தான் என் வாழ்க்கை என இருக்கும் இவருக்கு நாய்க்கு கேன்சர் கொஞ்ச நாட்களில் இறந்து விடும் என டாக்டர் கூறியதும் இவரின் நடிப்பு கல்லையும் உருக வைக்கிறது. அந்த நாயின் கடைசி ஆசையை தெரிந்து கொண்டு அதனை நிறைவு செய்ய இவர் எடுக்கும் ஒரு ஒரு முயற்சியும் நெகிழ்ச்சின் உச்சம் என்றே கூறலாம்.
Cinetimee
சார்லியாக வரும் செல்லப்பிராணி நாயின் நடிப்பை பார்க்கும் போது அதன் பயிற்சியாளரை பாராட்டியே ஆகவேண்டும். சார்லி செய்யும் அட்டகாசத்தை பார்க்கும் போது பேசாமல் நாமும் ஒரு நாய் வளர்க்கலாம் என்ற நினைப்பு வரும் உங்களுக்கு.
அடிக்கடி தன் முன்னங்கால்களை தூக்கி ரஷித் ஷெட்டி மீது வைக்கும் ஒரு ஒரு காட்சியிலும் நாமும் சார்லியின் பாசத்திற்கு அடியாக்கப்படுகிறோம். கேன்சர் என்ற சொன்ன பின்னர் நாய் மீது நமக்கு அப்படி ஒரு பாசம் வருகிறது. கடவுளே சார்லிக்கு ஒன்றும் ஆகவே கூடாது என்று நாம் கடவுளை வேண்ட ஆரம்பித்து விடுவோம்.
படத்தில் ரஷித் ஷெட்டி – சார்லி இருவருக்கும் மட்டுமே அதிக காட்சிகள். படத்தின் நாயகியாக வரும் விலங்கு நல வாரிய அதிகாரி சங்கீதா சிருங்கேரி அளவான மற்றும் அழகான நடிப்பு. சிறப்பு தோற்றத்தில் வரும் பாபி சிம்ஹா, கால்நடை மருத்துவராக வரும் ராஜ் பி ஷெட்டி, சார்லியின் பக்கத்து வீட்டு சிறுமி அத்ரிகாவாக ஷர்வரி என அனைத்து கதாப்பாத்திரங்களும் மனதில் பதிகிறது.
நோபின் பால் இசை மற்றும் பின்னணி இசை அரவிந்த் காஷ்யப் ஒளிப்பதிவு, பிரதீக் ஷெட்டியின் படத்தொகுப்பு என அனைத்துமே படத்திற்கு மிகப்பெரிய பலம்.