News
90களுக்கே நம்மை அழைத்து செல்கிறது கோமாளி
அதிரடி ஆக்ஷன் அதில் ஒரு சமூக கதைகள் என படங்கள் நடித்து வந்த ஜெயம் ரவி ஒரு நீண்ட இடைவெளிக்கு பின்னர் கோமாளி என்ற ஒரு முழு நீள நகைச்சுவை படத்தில் நடிக்கிறார். இந்த படத்தை அறிமுக இயக்குநர் பிரதீப் இயக்குகிறார்.
இந்த படம் 90-ஆம் ஆண்டுகளில் பிறந்த அனைவரின் நினைவுகளையும் திரும்பி பார்க்க வைக்கும் ஒரு படமாக இருக்கும். ஆமாம் அந்த காலகட்டத்தில் ஒரு படம் வெளியானால் அந்த படத்தின் பாடல்களும் புத்தகமாக வெளிவரும்.
அதை கடைகளில் சென்று வாங்கி படிக்கும் பழக்கம் நம்மில் பலருக்கு உண்டு. காலம் செல்ல செல்ல தொழிநுட்பம் வளர வளர அந்த பழக்கம் காணாமல் போய்விட்டது அதை நாம் மறந்து விட்டோம்.
இந்த நிலையில் ஜெயம் ரவியின் கோமாளி படம் 90ஆம் ஆண்டுகளில் நடக்கும் ஒரு பகுதியாக வருகிறது அதனால் இந்த படத்தின் இசை வெளியீட்டுக்கு வந்த அனைவருக்கும் கோமாளி படத்தின் பட்டு புத்தகத்தை வழங்கினர்.
அதுமட்டுமின்றி ஆகஸ்ட் 15ஆம் தேதி இந்த படம் வெளியாகும் தினத்தில் படம் பார்க்க வரும் அனைவருக்கும் பாட்டுப் புத்தகத்தை இலவசமாக கொடுக்கவும் படக்குழுவினர் முடிவு செய்துள்ளனர்.
கோமாளி படக்குழுவினர்களின் இந்த புதிய முயற்சிக்கு சினிமா ரசிகர்கள் பாராட்டு தெரிவித்து வருகின்றனர். தங்களை 90களின் காலத்திற்கே படக்குழுவினர் அழைத்து சென்று விட்டதாக சமூக வலைதளங்களில் கருத்துக்களை பதிவு செய்து வருகின்றனர்