News

தொப்பையை குறைக்க அறுவை சிகிச்சை செய்த நடிகை மரணம் !

Published

on

கர்நாடக மாநிலம் பெங்களூருவை சேர்ந்தவர் சேத்தனா ராஜ். பிரபல கன்னட சீரியல் நடிகையான இவர் ஹவயாமி என்ற கன்னட படத்திலும் நடித்துள்ளார்.

இவர் தனது வயிற்றுப்பகுதியில் உள்ள சதையை குறைக்க அறுவை சிகிச்சையை செய்ய அனுமதி கேட்டுள்ளார் சேத்தனா. ஆனால் அவரது குடும்பத்தினர் அதற்கு மறுத்துள்ளனர்.

இந்நிலையில் வயிற்றில் உள்ள கொழுப்பை நீக்குவதற்கான அறுவை சிகிச்சை மேற்கொள்ள நேற்று காலை மருத்துவமனைக்கு சென்றுள்ளார். சிகிச்சை முடிந்த சில மணி நேரத்தில் அவருடைய நுரையீரலுக்குள் நீர் சென்றுவிட்டதாகவும், அதனால் அவருக்கு சுவாசப்பிரச்சனை ஏற்பட்டுள்ளதாகவும் மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.இதனையடுத்து ஐசியூவில் சேத்தனாவுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது. ஆனால் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.

மருத்துவமனையில் போதிய வசதி இல்லாததால் சரியான சிகிச்சை அளிக்க முடியவில்லை என சேத்தனாவின் தந்தை கோவிந்தராஜ் குற்றம்சாட்டியுள்ளார்.

Trending

Exit mobile version