News
முருங்கைக்காய் சிப்ஸ் படத்துக்கு ஏ சான்றிதழ் !
தமிழ் சினிமா ரசிகர்களுக்கு மட்டுமல்ல தமிழ்நாட்டில் இருக்கும் பலருக்கு முருங்கைக்காய் என்றாலே நினைவிற்கு வரும் ஒரே நபர் நடிகர் இயக்குநர் பாக்யராஜ் மட்டுமே. காரணம் இவரின் முந்தானை முடிச்சி படத்தில் முருங்கைக்காய் வைத்து அடல்ட் காமெடி செய்திருப்பார்.
இந்தநிலையில் தற்போது இவரின் மகன் சாந்தனு மற்றும் அதுல்யா ரவி நடிப்பில் வரும் வெள்ளியன்று திரைக்கு வரவிருக்கும் திரைப்படம் முருங்கைக்காய் சிப்ஸ். இப்படத்தில் முந்தானை முடிச்சி ஜோடியான பாக்யராஜ் மற்றும் ஊர்வசி இருவருமே முக்கியமான வேடங்களில் நடித்துள்ளனர்.
இவர்களுடன் இப்படத்தில் யோகிபாபு, மொட்டை ராஜேந்திரன் என பலர் நடித்துள்ளனர். இப்படத்தை பார்த்த தணிக்கை குழு ஏ சான்றிதல் வழங்கியுள்ளனர்.