Connect with us
 

News

அனைத்து தரப்பினரும் ரசிக்கும் ஒரு குடும்ப கதை திரைப்படம் – தில் ராஜு தகவல் !

Published

on

தளபதி விஜய் தற்போது நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் பீஸ்ட் படத்தில் நடித்து முடித்துள்ளார். இப்படத்தை சன் பிக்சர்ஸ் தயாரித்துள்ளது. விஜய்க்கு ஜோடியாக தெலுங்கு நடிகை பூஜா ஹெக்டே நடித்துள்ள ‘பீஸ்ட்’ படம் ஏப்ரல் மாரம் திரைக்கு வருவிருக்கிறது.

இந்த படத்தையடுத்து தெலுங்கு பட இயக்குநர் வம்சி இயக்கத்தில் தமிழ் மற்றும் தெலுங்கு உருவாகும் படத்தில் நடிக்கவிருக்கிறார். இப்படத்திற்கு எஸ்.தமன் இசையமைக்கிறார். இப்படத்தின் படப்பிடிப்பு ஏப்ரல் மாதம் ஆரம்பிக்கவுள்ளது.

இந்த படத்தை தெலுங்கு பிரபல தயாரிப்பாளர் தில் ராஜூ தயாரிக்கிறார். சமீபத்தில் இவர் தொலைக்காட்சி ஒன்றுக்கு பேட்டியளித்துள்ளார். அதில் அவர் பேசியதாவது இந்த திரைப்படம் குடும்ப உறவுகள் குறித்து பேசும் திரைப்படம். நடிகர் விஜய் பல வருடங்களுக்கு முன் பூவே உனக்காக போன்ற திரைப்படங்களில் நடித்துள்ளார்.

பின்னர் நீண்ட ஆண்டுகளுக்கு பின்னர் நல்ல கதையெ கேட்டுள்ளேன் என்று அவர் பாராட்டினார். வம்சி சிறந்த பங்களிப்பை வழங்க வேண்டும் என்றார். படத்தின் கதையை கேட்டபோது மிகவும் பிடித்திருந்தது.

விஜய் ஒரு மாஸ் நடிகர் என்பதால் படத்தில் சண்டைக்காட்சிகள், பாடல்கள் எல்லாம் படத்தில் இருக்கும். இதயத்தை தொடுகின்ற வகையில் உணர்வுபூர்மான திரைப்படமாக இருக்கும் என்று கூறியுள்ளார்.