News

புத்தம் புது காலை விடியாதா அவசியம் பார்வையிட வேண்டிய தொடர் !

Published

on

வாழ்க்கை என்பது பல்வேறு வகையான சுவைகளை கொண்டது. டிஜிட்டல் தளங்களில் ஒளிபரப்பாகும் ஆந்தாலஜி பாணியிலான தொடர்களும் இதே போன்றே பன்முகத் தன்மை வாய்ந்த படைப்புகள் தான். இதன் காரணமாகவே கடந்த சில ஆண்டுகளாக ஆந்தாலாஜி பாணியிலான திரைப்படங்களின் மீது மக்களின் ஆர்வம் அதிகரித்து வருகிறது. இடைநிறுத்தம் இல்லாதது, நவீன யுக காதல், காமம் சார்ந்த கதைகள் போன்ற தொடர்களுக்காக இந்த பாணியிலான திரைப்படங்களுக்கு பார்வையாளர்களிடமிருந்து பாராட்டுகள் குவிகிறது. மேலும் ஓ டி டி தளங்கள் பார்வையாளர்களுக்காக புதிய கதைகளையும் வழங்குகிறது. ஓ டி டி இயங்கு தளத்தில் உள்ள ஏனைய கதைகளைப் போல் அல்லாமல் ஒரே தொகுப்பில், வெவ்வேறு கருப்பொருள்கள் மற்றும் உணர்வுகளை கொண்ட, சிறிய வித்தியாசமான கதைகள் இடம்பெற்றிருக்கின்றன.

நீங்கள் அவசியம் பார்வையிட வேண்டிய வரிசையில் இடம் பெறவேண்டிய தொடர்களும், திரைப்படங்களின் பட்டியலும் இதோ..

புத்தம் புது காலை விடியாதா

‘புத்தம் புது காலை விடியாதா’ என்ற தொகுப்பில் ஐந்து அத்தியாயங்கள் இடம் பெற்றுள்ளன. இவை அனைத்தும் தொற்றுநோய் காலகட்டத்தில் இரண்டாவது முறையாக நடைமுறைப்படுத்தப்பட்ட லாக்டவுனில் கதாபாத்திரங்கள் எதிர்கொள்ளும் தடைகள் மற்றும் சவால்களின் பொதுவான தன்மையால் ஒன்றாக இணைக்கப்பட்ட ஐந்து தனி அத்தியாயங்களை கொண்டவை. இந்த ஐந்து கதைகளில் ஒவ்வொன்றும் ஒவ்வொரு கோணத்தில் படைக்கப்பட்டவை. நெகிழ்ச்சி மற்றும் மனச்சோர்வின் உணர்வை அழகாக படம் பிடித்து காட்டுகின்றன. ஆனால் புதிய விடியலை நோக்கி பயணிக்கும் பார்வையையும், நம்பிக்கையின் துணைகொண்டு இந்த தொடரில் ஒவ்வொரு கதையும் தனித்துவமாக உள்ளது. ஆனால் இவை அனைத்தும் நம்பிக்கையின் ஊடாக அனுபவ ரீதியிலான கண்டுபிடிப்பு மற்றும் மனித தொடர்புகள் மூலம் புதிய தொடக்கங்களின் கருப்பொருள்களால் ஒன்றாக இணைக்கப்பட்டுள்ளன. நெருக்கடி மிக்க காலகட்டத்தை அனைவரும் கடந்து வந்திருப்பதால் இந்த தொடர், பார்வையாளர்களுடன் எளிதாக தொடர்புப்படுத்திக் கொள்ளும். இந்தத் தொடர் 2022 ஜனவரி 14 தேதி பொங்கல் முதல் அமேசான் ப்ரைம் வீடியோவில் ஸ்ட்ரீமிங் செய்யப்படுகிறது. இதனைக் காண தவறாதீர்கள்.

இடைநிறுத்தம் இல்லாதது.. நயா ஸஃபர்

‘அண்ட்பாஸ்ட்’ ன் முதல் பாகம் 2020ஆம் ஆண்டில் தொடங்கியது. நயா ஸஃபர் என்பது ஐந்து ஹிந்தி மொழியிலான குறும்படங்களை கொண்ட அடுத்த பாக தொடராகும். ஒவ்வொன்றும் தொற்றுநோய் பரவிய காலகட்டத்தில் மக்கள் அனைவருக்கும் ஏற்பட்ட சவால்களை தனித்துவமான கோணத்தில் ஆராய்கிறது. அதே தருணத்தில் நேர்மறையான கண்ணோட்டத்தை ஏற்றுக் கொள்ள வேண்டியதன் அவசியத்தையும் வலியுறுத்துகிறது. அனைவரும் புத்தாண்டை வரவேற்கிறார்கள். கடினமான காலங்களில் கூட ஆக்கப்பூர்வமாக சிந்திப்பது, செயல்படுவது மற்றும் நேர்மறையான எண்ணத்துடன் வாழ்வது எப்படி? என்பதை இந்தத் தொடர் படம் பிடித்து காட்டுகிறது. படத்தின் தலைப்பைப் போல் இந்த தொடரை இடைநிறுத்தம் இல்லாமல் கண்டு ரசிக்கவும். 2022 ஜனவரி மாதம் 21ஆம் தேதி முதல் அமேசான் பிரைம் வீடியோவில் நயா ஸஃபர் ஸ்ட்ரீமிங் செய்யப்படுகிறது.

அஜீப் தஸ்தான்ஸ்

இந்த தொகுப்பில் நான்கு குறும்படங்கள் இடம் பெற்றுள்ளது. இவை அனைத்தும் மனித உறவுகளில் ஏற்படும் சிக்கல்களை மையப்படுத்தி உருவாகி இருக்கிறது. எதிர்பாராத சம்பவங்களால் முறிந்த உறவுகளின் சங்கடமான கொதிநிலையையும், நெருக்கடியான சூழலில் உணர்வுகளை தூண்டும் வித்தியாசமான வழிகளையும் இந்த படைப்புகளில் ஆராயப்படுகிறது. நுஷ்ரத் பரூச்சா, கொங்கனா சென் சர்மா, அதிதி ராவ் ஹயாத்ரி, ஜெய்தீப் அல்ஹாவத் போன்ற சிறந்த நடிகர்களின் தனித்துவமான நடிப்பிற்காக இந்த தொடரை அவசியம் பார்வையிடலாம். அஜீப் தஸ்தான்ஸ் தொடரின் ஸ்ட்ரீமிங்கை நெட்பிளிக்ஸ் தளத்தில் காணலாம்.

பாம்பே டாக்கீஸ்

இந்தி சினிமாவின் நூற்றாண்டுகளைக் கொண்டாடும் மூன்று ஆந்தாலஜி படங்களை கொண்டுள்ள இந்த தொடரில், நான்கு சிறு கதைகளின் மூலம் திரைப்படத்தின் ஆற்றலையும், சமூகத்தில் ஏற்படும் மாற்றத்தையும் இவை வெளிப்படுத்துகிறது. திரைப்படங்கள், மக்களின் மன நிலைகள் மற்றும் மும்பையின் பிரத்யேக மனநிலையை கொண்டாடும் படைப்பாக இது உருவாகியிருக்கிறது. இதில் நடிகை ராணி முகர்ஜி, நடிகர்கள் ரன்தீப் ஹூடா, நவாசுதீன் சித்திக் ஆகியோர் நடித்திருக்கிறார்கள். ஜோயா அக்தர், திபாகர் பானர்ஜி மற்றும் கரன் ஜோஹர் போன்ற நட்சத்திர திரைப்பட தயாரிப்பாளர்களால் உருவாக்கப்பட்டிருக்கும் இந்த பாம்பே டாக்கீஸ் எனும் தொடரை நெட்பிளிக்ஸில் அவசியம் பாருங்கள். நெட்பிளிக்ஸில் ஒளிபரப்பாகும் பாம்பே டாக்கீஸ் எனும் தொடரை காண தவறாதீர்கள்.

Trending

Exit mobile version