News

இணையத்தை மிரள வைக்கும் தளபதியின் புதிய புகைப்படம் !

Published

on

நாளைய தீர்ப்பு என்ற திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவிற்கு கதாநாயகனாக அறிமுகமானவர் விஜய். தற்போது தென்னிந்தியாவில் அதிக ரசிகர் பட்டாளத்தை கொண்ட நம்பர் ஒன் நடிகராவும் வெற்றி பட ஹீரோவாகவும் வலம் வருகிறார்.

இந்த நிலையில் தற்போது நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் பீஸ்ட் படத்தில் நடித்து வருகிறார். இது விஜய்யின் 65-வது திரைப்படமாகும் இப்படத்தில் பூஜா ஹெக்டே ஜோடியாக நடித்து வருகிறார். இப்படத்தை தொடர்ந்து பிரபல தெலுங்கு இயக்குநர் வம்சி இயக்கத்தில் அடுத்த படத்தை நடிக்கவுள்ளார்.

இந்த நிலையில் விஜய்யின் மேனேஜரான ஜகதீஷ் விஜய்யின் புதிய புகைப்படம் ஒன்றை டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். பீஸ்ட் படப்பிடிப்பு தளத்தில் எடுக்கப்பட்ட அந்த புகைப்படம் இணையத்தை கலக்கி வருகிறது. தளபதின் திரைப்படம் அல்ல ஒரு புகைப்படமே போதும் இணையமே பிரளயமாக.

Trending

Exit mobile version